Seeman about rajinikanth: ரஜினியை தொல்லை பண்ணாதீங்க..அவர நிம்மதியா இருக்க விடுங்க..சீமான் ஆதங்கம்..!

சூப்பர்ஸ்டார் ரஜினி ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கின்றார். வெற்றி தந்த உத்வேகத்தால் தன் அடுத்த அடுத்த பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார் ரஜினி. அந்த வகையில் ரஜினி அடுத்ததாக ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படம் முழுக்க முழுக்க வித்யாசமான படமாக இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது.

ஜெய் பீம் போல ஒரு அழுத்தமான படமாக தலைவர் 170 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தவிர லால் சலாம் என்ற படத்தில் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் ரஜினி. ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படம் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஜினி சர்ச்சை

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பு ரஜினி இமயமலை சென்றார். ரஜினி ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக இமயமலை சென்றால் அப்படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என்ற ராசி இருந்து வந்தது. அந்த ராசி தற்போது ஜெயிலர் படத்திற்கும் ஒர்கவுட் ஆகியுள்ளது. ஹிமாலய வெற்றிபெற்ற ஜெயிலர் திரைப்படம் ஐநூறு கோடியை கடந்து வெற்றிநடைபோட்டு வருகின்றது.

vijay in jawan event: ஜவான் ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் ? வேற லெவல் என்ட்ரி கொடுத்த தளபதி..!

இந்நிலையில் ரஜினி அவரை விட வயதில் சிரியவரான உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது பெரிய சர்ச்சையானது. இதையடுத்து ரஜினியை ஒரு சிலர் கடுமையாக விமர்சித்தனர். இதற்கு ரஜினி, ஞானிகளிடமும், யோகிகளிடமும் ஆசிர்வாதம் வாங்குவது என் வழக்கம் என கூறினார். இருந்தாலும் ஒரு சிலர் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இதைப்பற்றி
சீமான்
தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

சீமான் கருத்து

அவர் கூறியதாவது, ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதை விமர்சிக்கும் நீங்கள் அவரின் பண்புகளை பார்த்து பாராட்டாமல் இருக்கின்றார்களே ஏன் ? வயது வித்யாசம் பார்க்காமல் நடிகர்களிடமும், இயக்குனர்களிடமும் ரஜினி பண்பாக பழகி வருகின்றார். மேலும் நெல்சன் போல இளம் இயக்குனர்களிடம் எழுந்து நின்று பேசுகின்றார். அவர் நினைத்திருந்தால் உட்கார்ந்துகொண்டு அசால்டாக பேசலாம். ஆனால் அப்படியெல்லாம் ரஜினி செய்வதில்லை. அனைவர்க்கும் மரியாதை கொடுத்து வருகின்றார். எனவே அவருக்கு விருப்பமானதை அவர் செய்யட்டும். அவரை தொல்லை செய்யாமல் நிம்மதியாக இருக்க விடுங்கள் என பேசினார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.