Tecno Camon 20 Avocado Art Edition : 64MP கேமரா, 5000mAh பேட்டரி, 256GB ஸ்டோரேஜ் என ஏராளமான புதிய அப்டேட்டுகள்!

Tecno Camon 20 Avocado Art Edition சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரிஜினல் வர்ஷன் ஸ்மார்ட்போன் இதே ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆர்ட் எடிஷனில் இடம்பெற்றுள்ள ப்ராசஸர், டிஸ்பிளே , கேமரா மற்றும் இதர விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

​டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ்Tecno Camon 20 Avocado Art Edition மொபைலில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜை பொறுத்தவரை 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெற்றுள்ளது.
​கேமராTecno Camon 20 Avocado Art Edition-ல் ட்ரிபிள் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அதில், 64 மெகாபிக்ஸல் RGBW பிரைமரி கேமரா, 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா மற்றும் QVGA டெரிட்டரி கேமரா ஆகியவையும், 32 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
​ப்ராசஸர்Tecno Camon 20 Avocado Art Edition-ல் 8GB ரேம் வசதியுடன் கூடிய MediaTek Helio G85 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் Android 13-based HiOS 13.0 அடிப்படையில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
​பேட்டரி மற்றும் விலைTecno Camon 20 Avocado Art Edition மொபைலில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலையை பொறுத்தவரை 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 15,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.