vijay in jawan event: ஜவான் ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் ? வேற லெவல் என்ட்ரி கொடுத்த தளபதி..!

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட லியோ படப்பிடிப்பு மளமளவென முடிக்கப்பட்டது. காஷ்மீரில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பின்பு சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் விஜய் ஓய்வெடுக்க லன்டன் சென்றார்.

பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு கடந்த வாரம் சென்னைக்கு திரும்பினார் தளபதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் தளபதி 68 பட வேலைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல இருப்பதாக தகவல் வந்தது. தளபதி 68 படத்தின் லுக் டெஸ்ட்டிற்காக இவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றதாக செய்திகள் வந்தன.

ஜவான் நிகழ்ச்சி

இந்தியன் 2 படத்தின் லுக்கிற்காக கமல் 3D VFX ஸ்கேன் செய்ய லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அதே போல தளபதி 68 லுக்கிற்காக விஜய்யும் 3D VFX ஸ்கேன் செய்வததற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றதாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய் ஏர்போட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

அமெரிக்கா நகரில் விஜய் இருப்பதாகவும், அவர் நேற்று இரவு சென்னை திரும்பியதாகவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்து மேலும் ஒரு சிலர் விஜய் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் விஜய் திடீரென சென்னை வந்துள்ளதாகவும் பேசி வருகின்றனர். அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கானின் நாட்டில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் ஜவான்.

என்னதான் ஜவான் பாலிவுட் படமாக இருந்தாலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத் என தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் இப்படத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாகவே இப்படம் தமிழ் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது. எனவே இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது.

அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு பிரபலமான கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. எனவே இதில் விஜய் கலந்துகொள்ள இருக்கின்றார், அதனால் தான் திடீரென அமெரிக்காவில் இருந்து சென்னை வருகின்றார் என ஒரு சிலர் பேச துவங்கியுள்ளனர். ஆனால் விஜய் சென்னைக்கு தான் கிளம்பினாரா ? இல்லை அமெரிக்கா சென்றபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா ? என தெரியவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இருந்தாலும் விஜய் கலந்துகொண்டால் சிறப்பாக இருக்குமே என்பது தான் அனைவரது விருப்பமாகவும் இருக்கின்றது. இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.