சென்னை: கோலிவுட்டில் ரொம்பவே பிஸியான நடிகர்கள் விஜய் சேதுபதியும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கேரளாவின் பாரம்பரியமான ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் விஜய் சேதுபதி கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது.