இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். எனவே அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தன் 16 வயதில் அரவிந்தன் என்ற படத்தின் மூலம் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.
ஆனால் அப்படம் சரியாக போகவில்லை. அதைத்தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வந்தார். என்னதான் அவர் இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரீச்சானாலும் படம் வெற்றிபெறவில்லை. இதனால் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
அஜித்தின் உதவி
என்னதான் இசை சிறப்பாக இருந்தாலும் படம் ஓடவில்லை என்பதால் யுவனுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அந்த சமயத்தில் தான் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு அஜித்தின் தீனா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Sharukhkhan about vijay: நான் ஒன்னும் விஜய் இல்லை..அதெல்லாம் வேண்டாம்..ஷாருக்கான் ஓபன் டாக்..!
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு தீனா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை பற்றி பார்ப்போம். பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்திற்கு யுவன் இசையமைத்ததற்கு பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அந்த சமயத்தில் அஜித் யுவன் ஷங்கர் ராஜாவை அழைத்து பேசினார். உங்கள் இசையில் வெளியான பாடல்களை நான் கேட்டிருக்கின்றேன், சிறப்பாக இருந்தது. என் படத்திற்கு இசையமைக்க முடியுமா என கேட்டுள்ளார் அஜித். இதை சற்றும் எதிர்பாராத யுவன் ஷங்கர் ராஜா திகைத்து பொய் நின்றுள்ளார். அப்போது எனக்கு உங்கள் மீது அதீத நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக உங்களால் சிறப்பாக பண்ண முடியும். நான் உறுதுணையாக இருக்கின்றேன் என அஜித் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஊக்கமளித்துள்ளார்.
நெகிழ்ச்சியாக பேசிய யுவன்
இதைத்தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா நம்பிக்கையுடன் தீனா படத்திற்கு இசையமைத்தார். படமும் மிகப்பெரிய வெற்றிபெற்றது, பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து யுவனை வெற்றிகரமான இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நிலை நாட்டியது. அதன் பிறகு யுவன் ஷங்கர் ராஜாவிற்கு திரையுலகில் ஏறுமுகம் தான்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் தீனா படத்தை தொடர்ந்து பல படங்களில் அஜித் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் அஜித் தான் தன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தவர் என யுவன் பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது