மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் காதலித்த ஜெஸியை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அதில் கோலிவுட்டில் ஹீரோவாக தயாராகி வருகிறார் சூர்யா விஜய் சேதுபதி.
Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்!
இந்நிலையில் தான் பள்ளியில் படித்தபோது ஒரு பெண்ணை விஜய் சேதுபதி காதலித்த விபரம் தெரிய வந்திருக்கிறது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜவான் பாலிவுட் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அட்லி பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி தான் ஒரு காலத்தில் காதலித்த பெண்ணை ஷாருக்கானை வைத்து பழிவாங்கிவிட்டதாக கூறினார்.
விஜய் சேதுபதி கூறியதாவது,
நான் பள்ளியில் படித்தபோது ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் அவரோ ஷாருக்கானை காதலித்தார். ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் அந்த பெண்ணை பல ஆண்டுகள் கழித்து தற்போது பழிவாங்கிவிட்டேன் என்றார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
விஜய் சேதுபதி கூறியதை கேட்டவர்களோ, இருந்தாலும் இப்படி பழிவாங்க எந்த வில்லனாலும் முடியாது பாஸ். ஆசையா காதலித்த புள்ளையை பயங்கரமாக பழி வாங்கியிருக்கிறீர்கள். உங்கள் பாஷையில் சொல்லப் போனால் ப்ப்ப்பா. கீப் இட் அப் என தெரிவித்துள்ளனர்.
ஜவான் இசை வெளியீட்டு மேடையில் விஜய் சேதுபதி மேலும் கூறியதாவது,
14 வயது மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்: அப்படியே ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்களேன்
ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் நகரில் ஷாருக்கானை சந்தித்தேன். அந்த நிகழ்ச்சியில் என் இருக்கை எங்கே இருக்கிறது என தேடிக் கொண்டிருந்தேன். ஷாருக்கானுக்கு பக்கத்து இருக்கை என்னுடையது என்பதை கண்டுபிடித்தேன். அவர் என்னை பாராட்டினார். அதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்ததது. அதன் பிறகு நடந்த பார்ட்டியில் ஷாருக்கான் என்னிடம் வந்து, நான் உங்களை பற்றி சொன்னது உண்மை என்றார்.
ஷாருக்கான் அனைவரையும் மதித்து ஒரே மாதிரியாக நடத்துவார். ஷாருக்கான் சார், உங்களின் மூளை வேலை செய்யும் விதத்தை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன். நீங்கள் பதில் சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி, லவ் யூ சார்.
இங்கு பலர் அட்லி பற்றி பல விஷயம் சொன்னார்கள். அவருடன் வேலை செய்தது சவுகரியமாக இருந்தது. அவரின் தெறி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அட்லி ஒரு கதையை திரையில் காட்டும் விதம் பிடித்திருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
ஜவான் படத்தில் மாஸ்டரை போன்று மொரட்டு வில்லனாக வருகிறார் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருக்கிறார் ஷாருக்கான். முன்னதாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியில் ஷாருக்கானை பார்த்த விஜய் சேதுபதியோ, ஜி உங்களுக்கு வில்லனாக நடிக்க ஆசையா இருக்குஜி என்று கூறியிருக்கிறார்.
ஆர்.டி.எக்ஸ். சிறந்த ஆக்ஷன் படம், கண்டிப்பா பாருங்க: 3 தம்ஸ் அப் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
உடனே அங்கிருந்த அட்லியை அழைத்து, விஜய்யை எனக்கு வில்லனாக்கிடுங்க என தெரிவித்துள்ளார் ஷாருக்கான். அப்படித் தான் ஜவான் பட வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.