வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, மிகச்சிறந்த துணை அதிபர் வேட்பாளர் ஆக இருப்பார் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான போட்டியில் உள்ளவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமியும் இடம்பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், சவுத் கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் உள்ளனர்.
இந்நிலையில், அவர் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியதாவது; விவேக் ராமசாமி மிகச்சிறந்த அறிவாளி. சிறந்த ஆற்றல் மிக்கவராக உள்ளார் என்றார். விவேக் ராமசாமியை துணை அதிபர் வேட்பாளராக கருதுவீர்களா என்ற கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்: அவர் மிகச்சிறந்த துணை அதிபர் வேட்பாளர் ஆக இருப்பார் எனக்கூறுவேன் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement