புதுடில்லி: செப்., 9 -10 ல் இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் பிரதமர் லி கெகியாங் கலந்து கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டு ஜி-20 அமைப்பிற்கு நாம் நாடு தலைமை வகிப்பதை ஒட்டி, இது தொடர்பான கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்த ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு செப்.,9 மற்றும் 10 தேதிகளில் புதுடில்லியில் நடக்க உள்ளது.
இங்குள்ள பிரகதி மைதானத்தில் நடக்க உள்ள கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதில், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில் சீனப் பிரதமர் லி கெகியாங் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement