டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 7 இருக்கை பெற்ற ருமியன் எம்பிவி காரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
நேரடியாக மாருதி எர்டிகா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் காருக்கு போட்டியாக கியா கேரன்ஸ், XL6 மற்றும் எர்டிகா உள்ள நிலையில் கூடுதலாக 7 இருக்கை பெற்ற மற்றொரு பட்ஜெட் கார் ரெனால்ட் ட்ரைபர் விற்பனையில் உள்ளது.
Toyota Rumion On-Road Price in Tamil Nadu
எர்டிகா காரை அடிப்படையாக பெற்றிருந்தாலும் ருமியன் விலை ரூ.51,000 முதல் ரூ.61,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது. இரண்டிலும் பெரிதாக வித்தியாசம் டிசைன் அமைப்பில், என்ஜின், இன்டிரியர் எங்கும் இல்லை. ஒரு சில இடங்களில் குறிப்பாக புதிய அலாய் வீல், பம்பர், முன்புற கிரில் பகுதியில் மாற்றமும், இன்டிரியரில் சிறிய வித்தியாசந்நை ஏற்படுத்தியுள்ளது.
ருமியன் காரில் 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் புதிய 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகவும் கிடைக்கின்றது. ருமியன் கார் மைலேஜ் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 20.51kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.30kpl மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது.
கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷன் பெறும் பொழுது ருமியன் CNG பயன்முறையில் இயங்கும் போது 87hp மற்றும் 121.5Nm டார்க் ஆகும். சிஎன்ஜி 5 ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வருகிறது. கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜ் என்று கூறப்படுகிறது. ருமியனில் G, S மற்றும் V என மூன்று பிரிவில் 6 விதமான வேரியண்டுகள் உள்ளது.
ஆரம்ப நிலை வேரியண்ட் கூடுதல் ஆக்செரிஸ் சேர்க்கப்படாமல் ருமியன் ரூ.12.59 லட்சம் முதல் டாப் வேரியண்ட் ரூ.16.65 லட்சம் வரை கிடைக்கின்றது. சிஎன்ஜி பெற்ற வேரியண்ட் ரூ.1 லட்சத்தில் கிடைக்கின்றது. முழுமையான விபரங்கள் கீழே உள்ள அட்டவனையில் உள்ளது.
Toyota Rumion Variants | Ex-showroom | on-road TamilNadu |
Rumion S MT | ₹ 10,29,000 | ₹ 12,59,089 |
Rumion G MT | ₹ 11,45,000 | ₹ 13,99,973 |
Rumion S AT | ₹ 11,89,000 | ₹ 14,51,103 |
Rumion V MT | ₹ 12,18,000 | ₹ 14,85,073 |
Rumion V AT | ₹ 13,68,000 | ₹ 16,65,701 |
Rumion S MT CNG | ₹ 11,24,000 | ₹ 13,73,142 |
கொடுக்கப்பட்டு ஆன்-ரோடு விலை பட்டியல் டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரிஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.
வாரண்டி தொடர்பான வித்தியாசம், ரூமியன் மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ நிலையான உத்தரவாதம் வழங்குகின்றது. இது தவிர ஐந்து ஆண்டுகள் அல்லது 2,20,000 கிமீ வரை நீட்டிக்கலாம். மறுபுறம், மாருதி சுசுகி இரண்டு வருடம் அல்லது 40,000 கிமீ உத்தரவாதம் வழங்குகிறது, இது ஐந்தாண்டு அல்லது 1,00,000 கிமீ வரை நீட்டிக்கலாம்.