தமிழகத்தில் 'விக்ரம்' வசூலை முறியடித்த 'ஜெயிலர்'
தமிழகத்தில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களாக முதலிடத்தில் 'பொன்னியின் செல்வன் 1' படமும், இரண்டாவது இடத்தில் 'விக்ரம்' படமும் இருந்தது. 'பொன்னியின் செல்வன் 1' படம் தமிழகத்தில் தனது மொத்த ஓட்டத்தில் 200 கோடி வரை வசூலித்தது. 'விக்ரம்' படம் 175 கோடி வரை வசூலித்திருந்தது.
'ஜெயிலர்' படம் வெளியான 20 நாட்களிலேயே 180 கோடி வரை வசூலித்துள்ளது. இதன் மூலம் 'விக்ரம்' படத்தின் மொத்த ஓட்ட வசூலை 20 நாட்களிலேயே முறியடித்துள்ளது. இன்னும் 20 கோடி வசூலித்தால் 'பொன்னியின் செல்வன் 1' வசூலை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. இன்றுடன் 'ஜெயிலர்' படத்தின் மூன்றாவது வாரம் முடிவடைகிறது. வார இறுதி நாட்களில் படத்திற்கு இன்னும் அதிகமான வரவேற்பு இருப்பதால் அந்த 200 கோடி வசூலை முறியடிக்கவும் முடியும் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தைத் தவிர இதர மாநிலங்கள், வெளிநாடுகள் என 'ஜெயிலர்' படம் வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.