தமிழ் சினிமாவில் இசையால் ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தாலும், கலைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர்கள் கூட்டத்தையும் வைத்துக்கொண்டு வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் யுவன்.
தமிழ் சினிமாவில் எப்போதும் இசையையும், திரைப்படங்களையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. அந்த வகையில் பல படங்களுக்கு யுவனின் இசையே முகவரியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் பல புதுமுக நடிகர்கள், இயக்குனர்களின் படங்களை மக்களை சென்றடையே யுவனே மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அண்மையில் கூட மிர்ச்சி சிவா அளித்த பேட்டி ஒன்றில் சென்னை 600028 படத்தின் போது நாங்க எல்லாருமே புது முகங்களாக இருந்தோம். யுவன் மட்டும் தான் ரசிகர்களுக்கு தெரிந்த முகம் என கூறியிருந்தார். இப்படித்தான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு யுவன் அறிமுகமாக இருந்துள்ளார்.
மேலும் ஸ்பெஷலாக சில இயக்குனர்களுடன் சேர்ந்தால் மட்டும் யுவனின் இசை ஹைலைட்டாக அமையும். உதாரணமாக இயக்குனர்கள் ராம், வெங்கட் பிரபு, செல்வராகவன் உள்ளிட்டோரை கூறலாம். இந்நிலையில் இன்று யுவன் தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.
‘தளபதி 68’ பட கதை முதல் ஹீரோயின் வரை: வெளியான அசத்தலான அப்டேட்.!
இந்நிலையில் யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி யுவன். ‘தளபதி 68’ படத்தில் நீங்கள் கலக்குவதை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரிடம் அப்படியே ‘தளபதி 68’ பட அப்டேட் கொடுத்தா நல்லாருக்கும் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
‘லியோ’ படம் வெளியாகும் வரை ‘தளபதி 68’ குறித்து மூச்சு கூட விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. யாருமே எதிர்பார்க்காத காம்போவாக ‘தளபதி 68’ கூட்டணி இணைந்துள்ளது. அத்துடன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தில் விஜய் – யுவன் கூட்டணியும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ஏர்போர்ட்டில் விஜய்.. எல்லாம் ‘தளபதி 68’ படத்துக்காக: தீயாய் பரவும் புகைப்படம்.!