திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பிரமோற்சவம் தொடங்க உள்ள நிலையில் தேவஸ்தானம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தங்களின் வாழ்க்கையிலும் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டும் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி பிரமோற்சவம்இதனால் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் திருப்பதி பக்தர்களின் திருவிழாவாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா எல்1 மிஷன்: அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான இஸ்ரோ… சூரியனுக்கு வச்ச குறி!
செப்டம்பர் 18ஆம் தேதி முதல்அதன்படி இந்த ஆண்டு திருப்பதியில் இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவம், வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் தரிசனம் செய்ய சரியான நேரம்: கூட்டம் குறைந்தது… மளமளவென தரிசிக்கும் பக்தர்கள்!ஜெகன் மோகன் ரெட்டி9 நாட்கள் நடைபெறும் இந்த பிரமோற்சவம் செப்டம்பர் 26 ஆம் தேதி நிறைவடைய உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரமோற்சவத்தின் முதல் நாளான 18 ஆம் தேதி மாலை , ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பிப்பார் என்றும் கூறியுள்ளார்.9 நாட்கள் உற்சவம்இந்த ஆண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளதால், செப்டம்பர் 22ஆம் தேதி கருடசேவையும், 23 ஆம் தேதி ஸ்வர்ண ரதம் புறப்பாடும், 25ஆம் தேதி ரதோத்ஸவமும் நடைபெறும் என கூறியுள்ளார். 26ஆம் தேதி சக்ரஸ்நானம், துவஜாரோஹணம் நடைபெறுவதாகவும் தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாதுமேலும் பிரமோற்சவ கொண்டாட்டங்களின் போது கூட்ட நெரிசலை எதிர்கொள்ள தேவையான அனைத்து விரிவான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும், பிரமோற்சவம் விழா நடைபெறும் நாட்களில பரிந்துரை கடிதங்கள் எதுவும் பெறப்பட மாட்டாது என்றும் தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏஆர் ரஹ்மானின் சகலை… நடிகர் ரஹ்மானின் குடும்பம் இதுதான்… தீயாய் பரவும் போட்டோஸ்!விஜபி பிரேக் தரிசனம்விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் பூமனா கருணாகர் ரெட்டி கூறியுள்ளார். உற்சவ நாட்களில் சாமி வீதி உலாவின் போது பக்தர்கள் சிறந்த முறையில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பூமனா கருணாகர் ரெட்டி தெரவித்துள்ளார்.பிரமோற்சவ ஏற்பாடுகள்மேலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறை முன்பதிவுக்கான ஏற்பாடுகள், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதம் போன்ற வசதிகளும் சிறப்பாக செய்யப்படும் என்றும் பாகுபாடில்லாமல் அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏற்ற வகையில் திருப்பதி திருமலையில் பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். அண்ணன் அருண் விஜய்யுடன் ஸ்ரீதேவி விஜயகுமார்… ரக்ஷாபந்தன் கொண்டாட்டம்… தெறிக்கவிடும் போட்டோஸ்!
திருப்பதி தேவஸ்தான தலைவர்திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவராக திருப்பதி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான பூமனா கருணாகர் ரெட்டி சமீபத்தில்தான் பதவி ஏற்றார். தலைவராக பொறுப்பெற்ற பிறகு பூமனா கருணாகர் ரெட்டி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவர் தேவஸ்தான தலைவராக நீடிக்கவும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.கருட சேவை ரத்துஇந்நிலையில் அவரது தலைமையில் நடைபெறும் முதல் வருடாந்திர பிரமோற்சவம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே மகாமுனி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் கருட சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.மீண்டும் அதிகரிப்புதிருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முன்தினம் சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இலவச சர்வ தரிசனம் செய்யும் வைகுண்டம் காம்ப்ளக்ஸின் 18 கம்ப்பார்ட்மெண்டுகளில் தரிசனத்துக்காக காத்துள்ளனர். நேற்று மட்டும் 71132 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 26963 பேர் முடி காணிக்கை செய்துள்ளனர். உண்டியலில் 4.06 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது.