ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தென்ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் இன்று(ஆகஸ்ட் 31) தீ விபத்து ஏற்பட்டது. புகைமண்டலமாக மாறிய குடியிருப்பில் சிக்கி, சுவாச கோளாறு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்னையை சரி செய்ய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயில் கருகி 63 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து, குடியிருப்பில் மீட்பு பணி மேற்கொண்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உண்மையில் ஜோகன்னஸ்பர்க் நகரத்திற்கு இது ஒரு சோகமான நாள். 20 ஆண்டுகளுக்கள் எனது பணி அனுபவத்தில், இது போன்ற சம்பவத்தை நான் பார்த்தது இல்லை. தீ விபத்துக்கான காரணம் விசாரணையின் போது தெரியவரும். என்றார்.
ஜூன் மாதம், ஜோகன்னஸ்பர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement