சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. தான் செல்லும் பாதையில் பள்ளங்கள் மற்றும் மேடுகள் இருப்பதை முன்கூட்டியே உணரும் பிரக்யான் ரோவன், தன்னை பாதுகாத்துக் கொண்டே தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டுபிடித்தது. இதேபோல் ஆக்ஸிஜன், அலுமினியம், மாங்கனீசு உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதையும் ரோவர் கண்டறிந்தது. பிரக்யான் ரோவரின் இந்த கண்டுபிடிப்புகள் இஸ்ரோ விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை… சென்னைக்கும் இருக்காம்… தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!
தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் செயல்பாடுகள் குறித்தும் அவற்றின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் குறித்தும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து தகவல்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் ரோவர் அங்கும் இங்கும் ஓடி ஆய்வு செய்வதை வீடியோவாக விக்ரம் லேண்டர் படம் பிடித்ததை ஷேர் செய்த இஸ்ரோ, சந்தா மாமாவின் முற்றத்தில் குழந்தை விளையாடுவதை தாய் பாசத்துடன் ரசித்து பார்ப்பது போன்று இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
இஸ்ரோவின் அந்த வீடியோ பெரும் வைரலானது. அதனை தொடர்ந்து ரோவரின் மற்றொரு கருவி நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை மற்றொரு தொழில் நுட்பத்தின் மூலம் உறுதி செய்ததாக தெரிவித்த இஸ்ரோ, நிலவின் மேற்பரப்பில் சல்பர் வர காரணம் எரிமலை வெடிப்பா? அல்லது விண்கல் மோதலா என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
ரூ. 69100 கோடியில் மெட்ரோ… ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி தொடக்கம்… டோட்டலாய் மாறும் ஹைதராபாத்!
மேலும் சந்திரயான்-3 லேண்டரில் உள்ள பேலோட், தென் துருவப் பகுதியில் நிலவின் பிளாஸ்மா சூழலை முதன்முதலில் அளவீடு செய்துள்ளது என்றும் ஆரம்ப மதிப்பீடு நிலவின் மேற்பரப்புக்கு அருகில் உள்ள பிளாஸ்மா ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விக்ரம் லேண்டரில் உள்ள இல்ஸா கருவி நிலவில் ஏற்பட்ட அதிர்வை பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த இல்ஸா கருவி ரோவர் மற்றும் பிற பேலோடுகளின் இயக்கங்களை பதிவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திருப்பதியில் அடுத்த மாதம் இது கிடையாது… தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி!
ஆகஸ்ட் 26 ஆம் தேதி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வை இல்ஸா கருவி பதிவு செய்துள்ளதாகவும் இந்த அதிர்வு எதனால் ஏற்பட்டது என்று ஆய்வு செய்யப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ILSA பேலோட் LEOS, பெங்களூரில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.