இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பதால் அடிக்கடி ரசிகர்களிடம் திட்டும், சாபமும் வாங்கும் ஒரே இயக்குநர் விக்னேஷ் சிவனாக தான் இருக்கும். அதற்கு காரணம் அவர் மட்டுமே.
Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்!
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவை காதலித்த காலத்தில் அவரை டிசைன், டிசைனாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து தங்கமே, செல்லமே, வைரமே என்பார். அதை பார்த்து ஆள் இல்லாமல் அல்லாடும் 90ஸ் கிட்ஸுகள் எல்லாம் விக்னேஷ் சிவனை திட்டியதுடன் சாபமும் விட்டார்கள்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
90ஸ் கிட்ஸுகளின் சாபம் பலிக்காமல் போனது தனிக்கதை. திருமணமான பிறகும் நயன்தாராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். யோவ் உங்களுக்கு அழகான பொண்டாட்டி இருக்குனு ஓவராத் தான் போகிறீங்க. எங்களுக்கு கல்யாணத்துக்கு பெண்ணே கிடைக்கலனு கடுப்புல இருக்கோம். வேண்டாம் நிறுத்திக்கோங்க விக்கி என்கிறார்கள் மொரட்டு சிங்கிள்ஸ்.
இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் விக்னேஷ் சிவன். மகன்கள் உலக், உயிரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடத் துவங்கினார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
அதை பார்த்த ரசிகர்களோ, மகன்களின் முகம் தெரியாமலேயே புகைப்படம் வெளியிடுகிறீர்கள். முகத்தை காட்டினால் தான் என்ன அன்பான இயக்குநரே என லைட்டா கடுப்பானார்கள்.
View this post on InstagramA post shared by N A Y A N T H A R A (@nayanthara)
இந்நிலையில் தான் நயன்தாரா இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கிறார். மகன்கள் உலக், உயிரை தூக்கிக் கொண்டு ஸ்டைலாக நடந்து வந்த வீடியோவை வெளியிட்டு வந்துட்டேனு சொல்லு என கெத்து காட்டியிருக்கிறார் நயன்தாரா.
அந்த வீடியோவில் உயிரும், உலகும் அம்மாவை போன்று சன் கிளாஸ் அணிந்து பயங்கர ஸ்டைலாக இருக்கிறார்கள். அந்த செல்லங்கள் செம க்யூட்டாக உள்ளனர்.
உயிர், உலகின் முகத்தை முதல் முறையாக பார்த்த ரசிகர்களோ விக்னேஷ் சிவனிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். அம்மா நயன்தாரா தான் மகன்களின் முகத்தை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்கிற உங்களின் திட்டம் குறித்து தெரியாமல் அவசரப்பட்டு திட்டிவிட்டோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
உயிரும், உலகும் செம க்யூட்டாக இருக்கிறார்கள். இந்நேரம் கண்ணு பட்டிருக்கும், சுத்திப் போடுங்க இயக்குநரே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜித் குமாரை சந்தித்த விக்னேஷ் சிவன்: ஏ.கே. 63 படத்தை இயக்குகிறாரா?
கெரியரை பொறுத்தவரை பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கப் போகிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் அஜித் குமாரை அண்மையில் சந்தித்து பேசியிருக்கிறார் விக்கி. அதனால் அஜித்தின் ஏ.கே. 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக அஜித்தின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியான பிறகு அவரை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்த பெண்ணை வித்தியாசமாக பழி வாங்கிய விஜய் சேதுபதி: எப்படினு பாருங்க மக்களே
நயன்தாராவோ ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் செம்படம்பர் 9ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ஜவான் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அட்லி இயக்கியிருக்கும் ஜவான் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா.