வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி குறித்து, 80 சதவீத இந்தியர்கள் சாதகமான கருத்துகளை கொண்டுள்ளதாக, அமெரிக்காவின் ‘பியூ’ ஆய்வு மையத்தின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சமூக பிரச்னை
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 2004ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பியூ ஆய்வு மையம், சமூகப் பிரச்னைகள், பொதுக் கருத்துகள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி வருகிறது. இது, அந்நாட்டின் மிக முக்கிய சிந்தனை குழாமாகவும் திகழ்கிறது. இந்த ஆய்வு மையம், இந்தியா உட்பட உலகின் 24 நாடுகளில் 30,861 பேரிடம் பிப்., 20 முதல் மே 22 வரை கருத்துக் கணிப்பு நடத்தியது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து உலக அளவில் உள்ள பார்வை, சர்வதேச சக்தியாக இந்தியா உருவாகும் வாய்ப்பு, மற்ற நாடுகள் பற்றி இந்தியர்களின் கருத்து ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
இந்தியா குறித்து பெரும்பாலான நாடுகள் ஆதரவான கருத்துகளையே வெளிப்படுத்தி உள்ளன. உலக அளவில் 46 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவாகவும், 34 சதவீதம் பேர் இந்தியாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர். 16 சதவீதம் பேர் எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து 10ல் எட்டு இந்தியர்கள் ஆதரவான கருத்து வைத்துள்ளனர். 55 சதவீதம் பேர் மோடி குறித்து மிகவும் சாதகமான கருத்துகளை தெரிவித்தனர். இந்தியர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே, மோடி குறித்து ஆதரவற்ற நிலைப்பாடு வைத்துஉள்ளனர். இந்தியாவின் செல்வாக்கு சமீப காலத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக, 10ல் ஏழு இந்தியர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
ரஷ்யாவின் செல்வாக்கு:
சமீப காலங்களில் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக 49 சதவீத இந்தியர்களும், ரஷ்யாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக 41 சதவீத இந்தியர்களும் கருத்து தெரிவித்தனர். சீனா குறித்து கலவையான கருத்துகளையே இந்தியர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement