புதுடில்லி: ரயில்வே வாரிய தலைவர் மற்றும் சிஇஓ ஆக ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வேயின் 105 ஆண்டுகால வரலாற்றில், பெண் ஒருவர் வாரியத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ரயில்வே வாரிய தலைவராக இருக்கும் அனில்குமார் லகோதியின் பதவிக்காலம் ஆக.,31 அன்றுடன் நிறைவுபெறுகிறது. கடந்த அக்.,1ல் ஓய்வு பெறவிருந்த நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், காலியாகும் அந்த இடத்தில் ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். அலகாபாத் பல்கலையில் பட்டம் பெற்றவரான ஜெயா வர்மா சின்ஹா, 1988 ம் ஆண்டு இந்திய ரயில் போக்குவரத்து சேவை பிரிவில் இணைந்தார். வடக்கு, தெற்கு மற்றும் மத்திய ரயில்வே மண்டலங்களிலும் பணியாற்றி உள்ளார்.
தற்போது இந்திய ரயில்வே மேலாண்மை நிர்வாக உறுப்பினரான ஜெயா வர்மா சின்ஹாவை, ரயில்வே வாரியத்தின் சேர்மன் மற்றும் சிஇஓ ஆக நியமிப்பதற்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement