அஜித் குமார் வில்லத்தனமான ஹீரோவாக நடித்த மங்காத்தா படம் ரிலீஸாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மங்காத்தாவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் விநாயக் மகாதேவ் என்கிற ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த மங்காத்தா படம் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது தான் அஜித் குமாரின் 50வது படமாகும். அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும், பி.ஜி.எம்.மும் வேற லெவலில் இருந்தது. அந்த பிளாக்பஸ்டர் ரிலீஸாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.
14 வயது மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்: அப்படியே ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்களேன்ஜேசன் சஞ்சய்Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்!அஜித் குமார்மங்காத்தா படத்தின் ஹீரோ அஜித் குமார் என்றாலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம் மங்காத்தா. அஜித் குமாருக்காக யுவன் ஷங்கர் ராஜா போட்ட பி.ஜி.எம். இன்றளவும் பிரபலம். ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் டை அடித்து கருப்பு முடியுடன் வரும்போது மங்காத்தாவில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அதகளப்படுத்தினார் அஜித்.
சால்ட் அன்ட் பெப்பர்ஒரு ஹீரோ இப்படி நரைத்த முடியுடன் வந்திருக்கிறாரே என்று படம் பார்த்த யாருக்கும் வித்தியாசமாக தெரியவில்லை. சொல்லப் போனால் அஜித்துக்கு அந்த சால்ட் அன்ட் பெப்பர் லுக் சூப்பராக இருந்தது என்றே சொல்ல வேண்டும். என்னால் நல்லவனாக மட்டும் அல்ல கெட்டவனாகவும் நடிக்க முடியும் என நிரூபித்தார் அஜித். 50வது படத்தில் அஜித் குமார் எடுத்த ரிஸ்க் வீண் போகவில்லை.
ரஜினி பெங்களூர் போய் அங்க போகாமலா?, போயிருக்கார்: வைரல் வீடியோவெங்கட் பிரபுமங்காத்தா படம் பார்த்த அனைவருக்கும் வெங்கட் பிரபுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்றில் இருந்து அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக மாறிவிட்டார் வெங்கட் பிரபு. அஜித் மற்றும் விஜய்யை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்குமாறு ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வெங்கட் பிரபுவுக்கும் ஆசை தான், ஆனால் அது இன்றுவரை நடக்காமலேயே தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
ரூ. 100 கோடிரூ. 24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மங்காத்தா படம் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்தது. அஜித் குமாரின் 50வது படம் அவரின் கெரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு வெங்கட் பிரபு, அஜித் குமார் கூட்டணி மீண்டும் சேரவில்லை. இந்நிலையில் அஜித், விஜய்யை சேர்த்து இயக்குவதற்கு பதிலாக விஜய்யை மட்டும் வைத்து தளபதி 68 படத்தை இயக்கவிருக்கிறார் வெங்கட் பிரபு. அந்த படத்தில் அஜித்தை கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடாமுயற்சிஅஜித் குமாரோ மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக பேச்சு எழுந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என லைகா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் த்ரிஷாவும், தமன்னாவும் ஹீரோயின்களாக நடிக்கிறார்களாம்.
அஜித் குமாரை சந்தித்த விக்னேஷ் சிவன்: ஏ.கே. 63 படத்தை இயக்குகிறாரா?