நாகர்கோவில் ;பினாமி பெயரில் வளைகுடா நாடுகளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொழில் நடத்துவதாக தங்கம் கடத்தல்
வழக்கில் சிக்கிய சொப்னா கூறியுள்ளார்.திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதக பார்சலில் தங்க கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சொப்னா.
ஜாமினில் வந்தபின் முதல்வர் பினராயி விஜயன் மீது பல்வேறு புகார்களை கூறி வருகிறார்.அண்மையில் ‘டிவி’ பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:பினராயி விஜயன் பினாமி பெயரில் ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜா, அஜ்மான் நாடுகளில் தொழில்கள் நடத்தி
வருகிறார்.
கேரளாவில் ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன்னே அதனால் வளைகுடா நாடுகளில் பயன்பெறுவது யார் என கண்டுபிடிப்பார். அவர்களிடம் முன் பணம் பெறுவார். ஆனால் அந்த திட்டம் கைவிடப்படும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்க அவர்களுக்கும் தைரியம் இருக்காது.
பினராயி விஜயனின் முதன்மை செயலாளரான சிவசங்கர் பணியில் இருக்கும் போது தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுபோன்ற பல போலி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் தொடர்பான பல
ஆலோசனைக் கூட்டங்களில் நானும் கலந்து கொண்டுள்ளேன்.கேரளாவில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமரா திட்டத்திலும் பல கோடி ஊழல்
நடந்துள்ளது. விரைவில் பினராயி விஜயன் தொடர்பாக மேலும் பல தகவல்களை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement