தளபதி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிடித்த இரண்டு படங்கள் தெரிய வந்திருக்கிறது.
விஜய்விஜய்யை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்ததோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று எஸ்.ஏ. சந்திரசேகர் இருந்துவிடவில்லை. தன் மகனை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கி வெளியிட்டார். அதன் பிறகு விஜய்க்காக கதை கேட்டு தேர்வு செய்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் கதை கேட்டு ஓகே சொல்லி விஜய் நடித்த படங்கள் அனைத்தும் எங்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். இந்நிலையில் தான் எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு விஷயம் தெரிவித்துள்ளார்.விஜய் மகன்Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்!துப்பாக்கிவிஜய் இதுவரை 67 படங்களில் நடித்துவிட்டார். அவர் நடித்த படங்களில் தனக்கு மிகவும் பிடித்தது இரண்டு படங்கள் என்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். சச்சினும், துப்பாகியும் தான் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மிகவும் பிடித்த விஜய் படங்கள் ஆகும். அந்த இரண்டு படங்களையும் பல முறை பார்த்திருக்கிறாராம். மேலும் எப்பொழுது டிவியில் சச்சினோ, துப்பாக்கியா ஒளிபரப்பானாலும் இடத்தை விட்டு நகராமல் கடைசி வரை பார்ப்பாராம் எஸ்.ஏ. சந்திரசேகர்.
சச்சின்எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியதை கேட்ட ரசிகர்களோ, அப்பா எங்களுக்கும் சச்சின், துப்பாக்கி மிகவும் பிடிக்கும். பல முறை பார்த்துவிட்டோம். சச்சின், துப்பாக்கி படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தால் நன்றாக இருக்கும். சச்சினில் விஜய்ணா செம க்யூட் என்கிறார்கள். எனக்கு விஜய்யை சுத்தமா பிடிக்காது என்று கூறுபவர்கள் கூட விரும்பிப் பார்க்கும் படம் துப்பாக்கி ஆகும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
ஜேசன் சஞ்சய்எஸ்.ஏ. சந்திரசேகர் வழியில் பேரன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிவிட்டார். அவரின் முதல் படத்தை பிரமாண்டத்திற்கு பெயர் போன லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவர் பட ஹீரோ அப்பா விஜய் இல்லை. விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குவதில் தான் ஜேசன் சஞ்சய் ஆர்வமாக இருக்கிறார். அதனால் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்… என்று விரைவில் புது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா தயாரிப்பில் இயக்குநராகும் விஜய் மகன்
விஜய் சேதுபதிகாதலித்த பெண்ணை வித்தியாசமாக பழி வாங்கிய விஜய் சேதுபதி: எப்படினு பாருங்க மக்களேபேரன் இயக்குநராவது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, வீட்டிலேயே சூப்பர் ஸ்டார் இருக்கிறார், அவரை வைத்து படம் எடுத்து இயக்குநராகிவிடலாம் என்றேன். அதற்கு ஜேசனோ, இல்ல தாத்தா அப்பாவை வைத்து முதலில் படம் எடுக்க மாட்டேன். விஜய் சேதுபதியை தான் இயக்குவேன் என்றார் என கூறினார்.
விஜய் படம்அப்பா விஜய்யை இயக்கும் ஆசை ஜேசன் சஞ்சயக்கு இல்லாமல் இல்லை. ஆனால் முதலில் அனுபவம் பெற்று அதன் பிறகு அப்பாவை தன் பட ஹீரோவாக்க வேண்டும் என நினைக்கிறார் ஜேசன். ஒரு நடிகரின் மகன் இயக்குநராகியிருப்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகன் இயக்குநராகிவிட்டார், விஜய்ணா வழக்கம் போன்று அமைதியாக அவர் வேலையை மட்டும் பார்க்கிறார். அந்த மனுஷன் வேற ரகம் என்கிறார்கள் ரசிகர்கள்.
ஜேசன் சஞ்சய் கண்டிப்பா ஜெயிப்பார்: விஜய் மகன் என்பதால் அல்ல, அந்த ஒரு…