விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாத அமாவாசையில் இருந்து வரும் 4வது நாளான சதுர்த்தி நாள்தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதே விநாயகர் சதுர்த்தி வட மாநிலங்களில் அமாவாசைக்கு முன்பான 6 நாட்கள் மற்றும் அமாவாசைக்கு பின்பான 4 நாட்கள் என மொத்தம் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒவ்வோரு கோவிலிலும் மெகா சைஸ் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்படுவது வழக்கம்.
இதேபோல் வீடுகளிலும் மக்கள் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு அமாவாசை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளாக அறிவித்தது.
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!
இதனால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை எந்த நாள் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் விடுமுறை நாளாக அறிவித்ததற்கு இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 18 ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதியில் அறிவிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அதற்கு பதிலாக செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள் செப்டம்பர் 18ஆம் தேதியான திங்கள் கிழமைக்கு மாற்றப்படுகிறது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.