வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடலை பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை அறிமுகத்திற்கு முன்பாக அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தி வந்த முந்தைய UCE என்ஜினை பெற்றிருந்த புல்லட் இப்பொழுது J – சீரிஸ் என்ஜினுக்கு மாற உள்ளது.
மூன்று விதமான வேரியண்டில் 5 விதமான நிறங்களை பெற உள்ள புதிய புல்லட் 350 பைக்கில் கிக் ஸ்டார்டர் மட்டும் பெற்ற வேரியண்ட் தொடரலாம் மற்றும் கூடுதலாக செல்ஃப் ஸ்டார்ட் இணைக்கப்பட்டிருக்கும்.
RE Bullet 350
புல்லட் 350 பைக்கில் பாரம்பரியமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் பெட்ரோல் டேங்க் மீது ராயல் என்ஃபீல்டு லோகோ கொண்டு மிக நேர்த்தியான கோல்டன் பின்ஸ்டிரிப் பெற்று, RE Thump ஒலி மற்றும் முரட்டுத்தனமான தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும்.
மற்ற 350சிசி மாடல்களை போலவே J-சீரிஸ் என்ஜினை பெறுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான புல்லட், 20hp பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும்.
குறைந்த விலை மாடலில் ரியர் டிரம் பிரேக்பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டேங்க் வேறு நிறத்தில் மற்ற பாகங்கள் கருப்பு, என்ஜின் க்ரோம் ஆக இருக்கும்.
முந்தைய மாடலை விட புதிய புல்லட் 350 மாடலில் அகலமான டயர்களை பொருத்தப்பட்டு முன்புறத்தில் 100/90-19 யூனிட் மற்றும் பின்புறத்தில் 120/80-18, முன்புறத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக் வீல் இருக்கும்.
உயரம் குறைவானவர்களும் புல்லட் 350 பைக்கை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில், இருக்கை மூலம் உயரத்தை குறைக்க வசதி வழங்கப்பட உள்ளது.
செப்டம்பர் 1, 2023 அன்று விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதால் விலை மற்றும் பிற விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.