விஜய் அண்ணா என்னும் தளபதிதளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 1992இல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கலவையான விமர்சனங்களோட படங்களில் நடித்துவந்தார் விஜய். இருப்பினும், அவரது தொடர் முயற்சியால் பல படங்களில் நடித்து ரசிகர்களை உருவாக்கினார். இளைய தளபதி என ரசிகர்கள் இவரை அன்பாக அழைக்கும் வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ரசிகர்கள் இவரை உடன்பிறவா சகோதரராக நினைத்து அண்ணா என்றே அழைப்பது வழக்கம். சாதாரண படங்களில் நடித்து வந்த விஜய் பின்னர் கமர்சியல் படங்களைத் தேர்ந்தெடுத்து தளபதி என்னும் பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துவருகிறார் தளபதி. இப்போது லியோ, தளபதி 68 தான் தமிழ் நாட்டின் டாக் ஆஃப் தி டவுன். இவரின் வெற்றிக்கு இவர் காரணம் என்று நமக்கு தெரியும். ஆனால், இரண்டு முக்கிய இயக்குனர்களும், அவர்களின் இந்த வெற்றிக்கு தளபதி தான் காரணம் என கூறியிருப்பது தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் நெகிழ வைக்கிறது.
தளபதியின் பீஸ்ட்தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2022இல் வெளியான படம் தான் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கினார். இந்த படம் வெளியாவதற்கு முன் படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது, அனால், படத்தின் ரிலீஸ் பிறகு கலவையான விமர்சனங்களே வந்தது. தளபதி இந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது என பலரும் விமர்சித்தனர். என்னதான், வசூல்ரீதியாக நஷ்டத்தை சம்பாதிக்கவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது பீஸ்ட் படம். இந்த படத்திற்கு பிறகு ஜெயிலர் பட இயக்குனரான, நெல்சனுக்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இவர் படம் இயக்கக்கூடாது என எதிர்க்கும் அளவிற்கு நெல்சன் விமர்சிக்கப்பட்டார். சமீபத்தில், சூப்பர்ஸ்டாரை வைத்து நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.
தளபதி பற்றி நெல்சன் கூறியதுமாபெரும் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திற்கு பிறகு, இயக்குனர் நெல்சனின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. சமீபத்தில், நெல்சன் விஜய் பற்றி பேசியது நெகிழ்ச்சியாக உள்ளது. அண்மையில் அவர் கொடுத்த ஒரு நேர்காணலில், தளபதி மற்றும் அவர் நெல்சனுக்கு கொடுத்த தைரியத்தை பற்றி பேசியுள்ளார். “தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரிதான் பேசினார். பீஸ்ட் படம் தோல்வியினால் நான் சோகமடைவேன் என அறிந்து அடிக்கடி நான் என்ன செய்கிறேன் என கவனித்துக்கொண்டே இருப்பார். அவரே ஒரு நாள் விட்டு ஒரு நாள் கால், மெசேஜ் என என்னை தொடர்பு கொள்வார். அவ்வப்போது, அவரின் மேனேஜர் என்னை தொடர்புகொள்வார். பீஸ்ட் படம்தான் தோல்வி அடைந்தது, நீ வேணும்னா பாரு நீ எடுக்கிற அடுத்தபடம் கண்டிப்பா ஹிட் ஆகும் என என்னை உற்சாகப்படுத்துவார். விமர்சனங்கள் அப்படிதான் வரும், சரியாகிடும். உன்னோட அடுத்த படம் ஹிட் ஆகும் பாரு என எப்போதுமே சொல்வார். VTV கணேஷிடம் கூட, நெல்சனின் அடுத்த படம் கண்டிப்பா வெற்றி படமாக அமையும் என தளபதி கூறியிருக்கிறார்” என நெல்சன் கூறியிருக்கிறார்.
தளபதி மற்றும் அட்லீயின் கூட்டணிஇயக்குனர் அட்லீ தனது இரண்டாவது படத்திலேயே தளபதி உடன் கூட்டணியமைத்தார். தொடர்ந்து, தெறி, பிகில், மெர்சல் என மூன்று படங்களை தளபதியை வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. பெரும்பாலும், அட்லீயின் படங்களுக்கு ஒரு விமர்சனம் தான் அதிகமாக வரும். அதாவது, மற்ற படங்களின் கதையை கொண்டு இவர் படம் இயக்குவதாக விமர்சனம் வரும். ஆனால், அதையெல்லாம் தவிர்த்து, விஜயுடன் இணைந்து இவர் இயற்றிய மூன்று படங்களுமே நல்ல வசூலையும் வரவேற்ப்பையும் பெற்றது. தற்போது, இயக்குனர் அட்லீ ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ஜவான் படத்தை இயற்றியுள்ளார். இந்த படத்தின் ஈவென்ட் நேற்று நடைப்பெற்றது. அந்த நிகழ்வில், இயக்குனர் அட்லீ தளபதி குறித்து பேசி இருக்கிறார்.
தளபதி பற்றி அட்லீ கூறியதுஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ “அவர் கொடுத்த நம்பிக்கை, என்னை கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே வர வைத்தது. ஷாருக்கான் உன்னுடன் படம் பண்ண விரும்புகிறார் என அழைப்பு வந்தது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நீ என்ன பண்ணுவன்னு தெரியாது. இந்த படத்தை பண்ணனும்னு விஜய் அண்ணன் தான் சொன்னாரு” என தளபதி விஜய் குறித்து கூறினார் அட்லீ. இந்த இரு ஊக்கமும் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது என சொன்னால் அது மிகையாகாது.