`அன்பை வெளிக்காட்டும் போதுதான் முழுமையாகும்!' – வாசகரைச் சந்தித்த சினேகா – பிரசன்னா

”எனக்கு வயது 70. 40 ஆண்டுகாலமாக ஆனந்த விகடனை வாசிக்கிறேன். எனக்கு ஒரு கனவு. வாழ்நாளில் ஒருமுறையாவது பிரசன்னா -சினேகாவை சந்தித்து ஒரே ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும். நீங்கள் என் கனவை நிறைவேற்றுவீர்களா?” – என்று திருப்பூரில் உள்ள உடுமலையில் வசித்து வரும் ஜெகன் சத்தியராஜ், நம்மிடம் வேண்டுகோள் வைத்தார்… பிரசன்னா -சினேகா இந்த விஷயத்தை பிரசன்னா – சினேகாவிடம் சொன்னோம்.. ஆச்சரியத்தில் நெகிழ்ந்தார்கள். தங்கள் தந்தை வயதுள்ள ரசிகர் ஜெகனை வீட்டிற்கு அழைத்து உணவு … Read more

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்…

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 அமர்வுகள் மட்டுமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் குறித்து எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்ற போதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுமா … Read more

சவுதி அரேபியாவில் ரீ-ட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை.. அப்படி என்ன செய்தார் அவர்?

ரியாத்: ஒருவர் போட்ட ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, யூடியூப்பில் கருத்து தெரிவித்ததற்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை ஆர்வளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகிலேயேஅதிகமாக மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்த இடத்தில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு மதத்திற்கு எதிராக பேசவோ எழுதவோ முடியாது. Source Link

மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்த 27 வழக்குகளில் சி.பி.ஐ., விசாரணை| CBI investigates 27 cases of violence in Manipur

புதுடில்லி, மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த 19 குற்றங்கள் உட்பட 27 வழக்கு களின் முதல் தகவல் அறிக்கைகளை, மாநில போலீசாரிடம் இருந்து பெற்ற சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி மற்றும் கூகி பழங்குடியினர் சமூகத்தினரிடையே மே 3ல் மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதற்கு அடுத்த நாள், கூகி பிரிவைச் சேர்ந்த இரு பெண்கள் … Read more

48 வயதில் திருமணம் பற்றி மனம் திறந்த நக்மா

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக 1994ல் வெளிவந்த 'காதலன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நக்மா. அதற்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்துவிட்டார். 'காதலன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் ஜோடியகா நடித்த 'பாட்ஷா' படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்தார். பின்னர் போஜ்புரி மொழியில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். 2008ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் … Read more

சிறந்த துணை அதிபர் வேட்பாளர்: விவேக் ராமசாமியை புகழும் டிரம்ப்| Would Make A Very Good…: Trumps Big Praise For Indian-American Rival

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, மிகச்சிறந்த துணை அதிபர் வேட்பாளர் ஆக இருப்பார் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான போட்டியில் உள்ளவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமியும் இடம்பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் … Read more

ஈரம் பட நடிகையை ஞாபகம் இருக்கா.. அடையாளமே தெரியாத அளவுக்கு குண்டான சிந்து மேனன்!

சென்னை: ஈரம் படத்தின் மூலம் பிரபலமான சிந்து மேனன் அடையாளமே தெரியாத அளவிற்கு ஓவர் வெயிட் போட்டுள்ளார். பெங்களூரில் பிறந்த சிந்து மேனன் கன்னடம் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் 2001ஆம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக துர்கா என்ற படத்தில் நடித்தார். அதன் பின் யூத்

இந்தியா கூட்டணி சுயநல கூட்டணி.. பாஜக கடும் விமர்சனம்

மராட்டியத்தின் மும்பை நகரில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற கூடிய நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை ஒன்றிணைந்து எதிர்கொள்ளவும், ஆட்சியை பிடிக்கவும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த சந்திப்பை நடத்துகின்றன. இதற்கு முன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடந்துள்ள சூழலில், இன்று தொடங்கும் 3-வது கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் இக்கூட்டம் எதிர்க்கட்சி தலைவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி … Read more

ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி…!!

சலாலா, அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் 2 போட்டிகளில் வங்காளதேசம் மற்றும் ஓமனை வீழ்த்தி மெகா வெற்றிகளை பதிவு செய்து இருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5-4 என்ற கோல் … Read more

'வழக்கமான நடைமுறைதான்' – புதிய வரைபடம் தொடர்பாக சீனா விளக்கம்

பீஜிங், இந்தியாவின் அருணாசல பிரதேசம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த வரைபடத்தை நிராகரித்த இந்தியா, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் கண்டனம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘சீனாவின் தேசிய வளத்துறை அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தை வெளியிட்டது. சீன … Read more