தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவாக விமர்சித்த நாளிதழ்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான தலைப்பிட்டு விமர்சித்த தினமலர் பத்திரிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கிற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் இன்று … Read more

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்ததாக ஆதாரமில்லாமல் புகார் கூறுகிறார் ராகுல்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதில்

இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள லடாக்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள தாக ராகுல் காந்தி அண்மைக் காலமாக புகார் கூறி வருகிறார். சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தி கூறும்போது, “லடாக் பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நான் லடாக் சென்றிருந்தபோது உள்ளூர் மக்களும் இதைத் தெரிவித்தனர். ஆனால் ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று … Read more

கூகுள் Search-ல் ஜெனரேட்டிவ் AI அம்சம்: பயன்படுத்துவது எப்படி?

புதுடெல்லி: கூகுள் தேடுபொறியில் ஜெனரேட்டிவ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அம்சத்தை இந்திய பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதனை பயன்படுத்த பயனர்கள் தங்களது விருப்பத்தை சேர்ச் லேப்ஸில் தெரிவிக்க வேண்டி உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் செயலிகளில் ஜெனரேட்டிவ் ஏஐ-யின் பங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஜெனரேட்டிவ் ஏஐ அம்சத்தை கூகுள் சேர்சில் இணைத்துள்ளது கூகுள். தற்போது இது இந்தியாவில் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. இப்போதைக்கு கூகுள் குரோம் … Read more

பச்சோந்தி போல மாறுறீங்க – ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கை 11 வருடங்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்துள்ள நீதிமன்றம், சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுக ஆட்சி நடந்த 2001 -2006 காலகட்டத்தில் வருவாய் துறை அமைச்சராகவும், சில வருடங்கள் முதலமைச்சராகவும் இருந்தவர் . அதன்பிறகு வந்த திமுக அரசு, ஓபிஎஸ் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தது. ஓபிஎஸ் தனது மனைவி, மகன்கள், மகள் மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்தது … Read more

Jawan trailer: ஷாருக்கானின் ஜவான் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

காலை உணவு திட்டத்துடன் கழிவறையை ஒப்பிட்ட பிரபல நாளிதழ்..! கண்டனம் தெரிவித்த முதல்வர்..!

தமிழக அரசு கொண்டு வந்த காலை உணவு திட்டம் குறித்து ஒரு பிரபல நாளிதழ் வைத்திருந்த தலைப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   

US Open Tennis: யுஎஸ் ஓபன் டென்னிஸ் பட்டம் வெல்வது யார்? நடப்பு சாம்பியன்கள் அதிரடி

இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகளை மக்கள் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். உலக டென்னிஸ் ஆர்வலர்களை கவர்ந்த யுஎஸ் ஓபன் ஆகஸ்ட் 28 திங்கள் அன்று தொடங்கியது. மூன்று நாள் ஆட்டங்களுக்கு பிறகு, மகளிர் பிரிவில் 11-ம் நிலை வீராங்கனையான பெட்ரா க்விடோவா இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். 7-5, 7-6(5) என்ற செட் கணக்கில் டேன் கரோலின் வோஸ்னியாக்கி தனது சிறப்பாக விளையாடி  நேர் செட்களில் வென்றார். இரண்டாவது … Read more

ஆசை: கொடூர வில்லனாக மிரட்டிய பிரகாஷ்ராஜ், அஜித்துக்குக் கிடைத்த பிரேக் – வஸந்தின் இளமையான இயக்கம்!

அஜித் குமார் ‘தல’யாக மாறுவதற்கு முன்னால் நடித்த ஆரம்பக் காலப் படங்களில் ஒன்று ‘ஆசை’. தொடர்ந்து சுமாரான படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஜித்திற்கு முதன் முதலில் பெரிய பிரேக் தந்த படம், ‘ஆசை’தான். அரவிந்த் சுவாமிக்குப் பின்னர் ரசிகைகளின் வரவேற்பை அதிக அளவில் பெறும் அளவிற்கு ஸ்மார்ட்டான தோற்றத்தில் அஜித் இருந்தார். வலிமையான வில்லன் பாத்திரத்தை பிரதானமாக வைத்து ஒரு ஃபேமிலி திரில்லரை உருவாக்க விரும்பினார் இயக்குநர் வஸந்த் (வஸந்த் சாய்). பாலசந்தரின் ஸ்கூலில் இருந்து வெளிவந்த … Read more

ஆட்சியாளர்களுக்கு ஏற்ப விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்…

சென்னை: அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் அடுத்தடுத்து  ரத்து செய்யப்படுவது குறித்து  அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையான  விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறியுள்ளது என ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கடந்த  2001 முதல் 2006 ஆண்டுக்கு இடையே அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது,  வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.73 கோடி சொத்து சேர்த்ததாக, அடுத்து வந்த திமுக ஆட்சியில்  வழக்கு தொடரப்பட்டது.  … Read more

டாஸ்மாக்கிற்கே விபூதி.. ஓடும் லாரியில் 2160 மதுபாட்டில்களை திருடிய கும்பல்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி

கள்ளக்குறிச்சி: மதுபானங்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனத்தில் தார்பாயை பிரித்து 2160 மதுபாட்டில்களை திருடிய உசிலம்பட்டி கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோனில் இருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டு சென்றது. திருவண்ணா மலை மாவட்டம் Source Link