சென்னையில் ‘சூப்பர் ப்ளூ மூன்’

சென்னை: பூமியின் துணைக்கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால், மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு தோன்றும் போது, 2-வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். அந்தவகையில் ப்ளூ … Read more

மக்களவை தேர்தலில் வெல்ல பாஜக புதிய திட்டம் – இளம் வயது புதுமுகங்கள், மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக புதிய திட்டம் வகுத்துள்ளது. இதன்படி இளம் வயது புதுமுகங்கள் மற்றும் மாநிலங்களவை முக்கிய எம்.பி.க்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2014 முதல் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சியில் தொடர முயற்சிக்கிறது. இதற்காக பல்வேறு புதிய உத்திகளை வரும் மக்களவை தேர்தலில் கையாளத் திட்டமிடுகிறது. இதில் முக்கியமாக அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களை வேட்பாளர்களாக்க உள்ளது. … Read more

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,000 கோடி ஆயுதம் அனுப்பும் அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற நிலையில், உக்ரைனுக்கு போரில் உதவ 250 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) மதிப்பில் கூடுதலாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்கான உபகரணங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆம்புலன்ஸ், போர் மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அடிப்படை உள்கட்டமைப்பை … Read more

"பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா".. கூட்டணி வச்சா என்ன தப்பு.. ஆவேசமான எடப்பாடி பழனிசாமி

மதுரை: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்வியால் சூடான அதிமுக பொதுச் செயலாளர் , “பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?” என பதில் கேள்வியெழுப்பினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழலில் டெல்லி மேலிட நிர்பந்தத்தால் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. இப்போது வரை அந்தக் கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read more

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் காவிரி நீர் விவகாரம்! தொடர் போராட்டத்தில் கர்நாடக விவசாயிகள்

Cauvery water dispute: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் விவசாயிகள் நேற்று இரவு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்

ஆசியக்கோப்பை முதல் போட்டி! சொந்த மண்ணில் நேபாளத்தை தட்டித்தூக்கிய பாகிஸ்தான் வெற்றி

கடந்த முறை 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானில் தொடங்கிய ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில், தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் மோதிய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை … Read more

மக்களவை செயலகம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கத்தை ரத்து செய்தது

டில்லி காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த தொடரில் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பி இருந்தன.   இதனால் பலமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடரின் நிறைவு நாள் அன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் … Read more

51 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுக்காக ஜவான் மூலம் மீண்டும் இறங்கி வந்த பிரபல தியேட்டர்

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ஜவான். நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த வருடத்திலேயே ஜனவரி மாதத்தில் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஜவான் படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் அதேபோன்ற ஒரு … Read more