முந்தானை முடிச்சுனா முருங்கைக்காய் ‘கிக்’னா இது…படக்குழுவினரின் கலகல பேட்டி!

சென்னை : பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிக் படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி,கோவை சரளா, தம்பிராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படக்குழுவினர், எமது பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதைப்பார்க்கலாம். சந்தானத்தின்

டொயோட்டா ருமியன் காரின் ஆன்-ரோடு விலை விபரம் – Toyota rumion on-road price in Tamil Nadu

டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 7 இருக்கை பெற்ற ருமியன் எம்பிவி காரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். நேரடியாக மாருதி எர்டிகா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் காருக்கு போட்டியாக கியா கேரன்ஸ், XL6 மற்றும் எர்டிகா உள்ள நிலையில் கூடுதலாக 7 இருக்கை பெற்ற மற்றொரு பட்ஜெட் கார் ரெனால்ட் ட்ரைபர் விற்பனையில் உள்ளது. Toyota Rumion On-Road Price in Tamil Nadu எர்டிகா காரை … Read more

தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது

சென்னை: தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் 55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள … Read more

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலத்தின் ஏவுதல் ஒத்திகை வெற்றி

சென்னை: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக அனுப்பப்படும் `ஆதித்யா எல்-1′ விண்கலத்தின் ஏவுதலுக்கான ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டுகிறது. இதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இதில், சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசர், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் … Read more

கொடநாடு வழக்கு: நான் பதறலயே… ஆனா உடனே சிபிஐக்கு மாத்திருங்க: எடப்பாடி போடும் ஸ்பின் பால்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவை பயன்படுத்தி வந்தார். அதிமுக ஆட்சி நடந்த 2017ஆம் ஆண்டில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். கொடநாடு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஆட்சிக்கு வந்த பின் கொடநாடு வழக்கு சிபிசிஐடி … Read more

புதுவையில் எரிவாயு விலை ரூ.500 குறைப்பு : முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எரிவாயு விலையில் ரூ.500 குறைத்து உத்தரவிட்டுள்ளார்.   நேற்று வீட்டு உபயோக ஏரோவாயு சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என விலையைக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலைச் சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து … Read more

1885 ஆகஸ்டுக்கு பின் அதிக வெப்பம் கோடைக்காலமாக மாறிய பெங்களூரு| Bengaluru became the hottest summer after August 1885

பெங்களூரு:பெங்களூருக்கு ஆகஸ்ட் மாதம், மாறுபட்ட மாதமாக அமைந்துள்ளது. 1885க்கு பின், நடப்பு ஆகஸ்டில் 90 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே வெப்ப நிலை அதிகரித்து, கோடைக்காலமாக மாறியது. பெங்களூரில் பொதுவாக, ஆகஸ்ட் மாதம் மிக அதிகமான மழை பெய்வது வழக்கம். இம்முறை ஆகஸ்ட் மாதத்தில், வித்தியாசமான சூழ்நிலை இருந்தது. வெப்பம் வாட்டி வதைக்கிறது. கோடைக்கால உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 1885க்கு பின், இந்த ஆகஸ்டில் வெப்பம் மிக அதிகமாக பதிவாகிறது. இது குறித்து, வானிலை ஆய்வக வல்லுனர்கள் … Read more

ரஜினி 170 வது படத்தில் ராணா, துஷாரா

ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், நானி, சர்வானந்த் என பலர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது பாகுபலி படத்தில் நடித்த வில்லன் ராணா மற்றும் சார்பட்டா பரம்பரையில் நடித்த துஷாரா விஜயன் ஆகியோரும் இணைந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு, ரஜினி … Read more

இந்தியாவுக்கு சீனா அடாவடி பதில்| China is the answer to India

பீஜிங்: ‘எங்கள் நாட்டு சட்டத்துக்கு இணங்க வழக்கமான நடைமுறையை பின்பற்றி வரைபடம் வெளியிட்டு உள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியா அமைதி காப்பதுடன், மிகை விளக்கம் அளிப்பதை தவிர்க்க வேண்டும்’ என, சீனா அடாவடியாக தெரிவித்துள்ளது. கட்டுப்பாடு: நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான தன் தேசிய வரைபடத்தை சமீபத்தில் சீனா வெளியிட்டது. இதில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் இடம்பெற்றுள்ளது. மேலும், 1962 … Read more