ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் கையிலெடுக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்!

2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவிவகித்தார். 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ், அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஓபிஎஸ் – அதிமுக ஊழல் … Read more

ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ முருங்கை ரூ.6 விற்பனை: கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையாவதால் வேறு வழியின்றி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, இடையகோட்டை, கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, அம்பிளிகை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டம், கேரளாவுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை அதிகரித்து ஒரு … Read more

'என்டிஏ-வில் மோடியை விட்டால் வேறு யார்?' – பிரதமர் வேட்பாளர் குறித்து உத்தவ் தாக்கரே கேள்வி

மும்பை: மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்ததன் நோக்கத்தை அனைவரும் அறிவார்கள். கடந்த 9 ஆண்டுகளாக சகோதரிகளைப் புறக்கணித்த அவர்கள், ரக்‌ஷா பந்தனுக்காக இப்போது சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்திருக்கிறீர்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 26 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வியாழக்கிழமை மும்பையில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவது முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தலுக்கு முன்பாக கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், … Read more

தங்கம், வைரத்தை பூமியில் புதைத்து வைத்திருக்கும் சீமான்.. பகீர் புகாருடன் வந்த விஜயலட்சுமி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து வந்த தங்கம், வைரப் பொருட்களை சீமான் பூமிக்குள் புதைத்து வைத்திருப்பதாக நடிகை விஜயலட்சுமி அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதை எங்கே புதைத்து வைத்துள்ளார் என்பதையும் கூறியுள்ள விஜயலட்சுமி, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையே, இந்த திருமணத்திற்கு முன்பே … Read more

பெண்களுக்கு மாதம் ரூ.2000 : இனி இந்தியா முழுக்க கர்நாடக மாடல்தான் – ராகுல் அதிரடி பேச்சு!

கர்நாடகாவில் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார். கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் பணம் வழங்கப்படும் உள்பட 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டத்திற்கு கிரகலட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. இந்த திட்டத்திற்காக ஆண்டுதோறும் 32,000 … Read more

ரஜினி பெங்களூர் போய் அங்க போகாமலா?, போயிருக்கார்: வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்றார். அங்கிருக்கும் ராகவேந்திரா சாமி கோவிலில் பிரார்த்தனை செய்தார். அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக பெங்களூருவில் இருக்கும் பஸ் டிப்போவுக்கு சென்று அங்கிருக்கும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரஜினி. Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்! பெங்களூரில் பஸ் கண்டக்டராக தன் கெரியரை துவங்கியவர் ரஜினி. என்ன தான் … Read more

Jawan: "அந்த பொண்ணுக்காக ஷாருக்கை பழிவாங்க இத்தனை நாள் ஆச்சு" -விஜய் சேதுபதி கலகல பேச்சு!

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இந்தப் படம் அட்லியாலதான் தொடங்கியது. இதில் நான் நடிக்க அவர்தான் காரணம். அட்லிக்குக் கதாபாத்திரங்களை இயக்க மட்டுமில்லை, ஒரு மனுஷன எப்படி கையாளணும் என்பதும் நல்லா தெரியும். … Read more

எங்கள் நோக்கம் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமே : உத்தவ் தாக்கரே

மும்பை உத்தவ் தாக்கரே ஜனநாயகத்தை காப்பது மட்டுமே தங்கள் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார் நாளை முதல் இரு நாட்களுக்கு மும்பையில் நா இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து  கொள்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும்  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டாகப் பேட்டி அளித்தனர். உத்தவ் தாக்கரே அப்போது “நடைபெற உள்ள 3-வது இந்திய கூட்டணி … Read more

தம்பிக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த பாசக்கார அக்கா| A loving sister who offered to donate a kidney for her younger brother

ராய்ப்பூர்: சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் தினத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் தம்பிக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் ஷீலாபாய் பால். இவரது தம்பி ஓம்பிரகாஷ் தங்கர், 48. இவர், 2022 மே மாதம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, குஜராத் மாநிலம் நாடியாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ஓம்பிரகாஷ் தங்கருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அவரது குடும்பத்தினர் … Read more

கொரோனா குமார் வழக்கு : ரூ.1 கோடி செலுத்த சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை தயாரித்தது. இதனை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார் தயாரிப்பாளர். அதாவது சிம்பு பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் இதே நிறுவனம் சிம்பு நடிப்பில் 'கொரோனா குமார்' படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் … Read more