Jawan: `ஒரு குட்டி கதை சொல்லட்டுமா!' விஜய் பாணியில் அட்லி சொன்ன குட்டிக் கதை; ஆச்சர்யப்பட்ட ஷாருக்

‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஷாருக் கானின் மாஸ் என்ட்ரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்ட யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படம் குறித்தும் ஷாருக்கானுடன் பணியாற்றியது குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசினர். அனிருத் ரசிகர்கள் மத்தியில் இறங்கி பாடல் பாடி பர்பாமன்ஸ் செய்ய உற்சாகத்தில் ஷாருக்கானும் மேடையில் அனிருத்துடன் டான்ஸ் ஆடி அரங்கை உற்சாகமடையச் செய்தார். அட்லி Jawan: “கொஞ்சம் சிரமம்; ஆனா, நான் தளபதி ரசிகன்; சொன்னதை செய்வேன்” விஜய் … Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஏழை மக்களின் நலன் மட்டுமே எண்ணம் : ராகுல் காந்தி

பெங்களூரு காங்கிரஸ் கட்சியின் எண்ணம் ஏழை மக்களின் நலன் மட்டுமே என ராகுல் காந்தி கூறி உள்ளார். இன்று கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் சித்தராமையா , துணை முதல்வர் டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன … Read more

மனைவி வீட்டுக்கு மாந்திரீகம் ரத்தம் தெளித்த கணவர் கைது..| Husband arrested for sprinkling witch blood at wifes house

சிக்கமகளூரு : கணவருடன் சண்டை போட்ட மனைவி, பிறந்த வீட்டுக்கு சென்றதால், கோபமடைந்த கணவர், மாமனார் வீட்டுக்கு மாந்திரீகம் செய்துள்ளார். புகாரின்படி, அவரை போலீசார் கைது செய்தனர். சிக்கமகளூரு, மூடிகெரேவின், பனகல் அருகில் மத்திகட்டே கிராமத்தில் வசிப்பவர் சதீஷ். இவர் தன் தங்கை சுமித்ராவை, 12 ஆண்டுகளுக்கு முன் மரசனி கிராமத்தை சேர்ந்த குருமூர்த்திக்கு, திருமணம் செய்து கொடுத்தார். சில ஆண்டுகளாக, கணவன், மனைவி இடையே அவ்வப்போது சண்டை நடந்தது. வீட்டு பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். … Read more

'வாரிசு' வெளியான வருடத்தில் இயக்குனராகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் நடிகர்களின் வாரிசு இயக்குனர்கள் என நடிகர் ரஜினிகாந்த்தின் மகள்களாக ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். “3, வை ராஜா வை” ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. 'கோச்சடையான்' படத்தை இயக்கினார் சவுந்தர்யா. அவர்கள் இருவருக்குப் பிறகு வாரிசு இயக்குனராக வந்துள்ளார் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். 2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்து வெளிவந்த படம் … Read more

Yogi babu: சீக்கிரமா ஹாலிவுட் போங்க சார்.. அட்லிக்கு கொக்கி போட்ட யோகிபாபு!

சென்னை: நடிகர் ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளது. படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே

ஆன்லைன் வர்த்தக நிறுவன மேலாளர் சுட்டுக்கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்

டெல்லி, தலைநகர் டெல்லியின் பஜன்புரா பகுதியை சேர்ந்தவர் ஹர்பிரீத் கில் (வயது 36). இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹர்பிரீத் கில் நேற்று இரவு 11 மணியளவின் தனது உறவினருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சுபாஷ் விஹார் பகுதியில் சென்றபோது அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்த ஹர்பிரீத் கில் தலையில் குண்டு பாய்ந்து … Read more

ஆசிய கோப்பை: நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

கராச்சி, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், … Read more

விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி – இலங்கை அரசு தகவல்

கொழும்பு, நமது அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியால் அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது முதல், இலங்கை அரசு இந்தியாவில் இருந்து முட்டைகளை நம்பியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து 20 லட்சம் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்த நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்கவும் இந்தியாவில் … Read more

`I.N.D.I.A கூட்டணியில் பலர் இருக்கிறார்கள்; NDA-வில் மோடியைவிட்டால் வேறு யார்?' – உத்தவ் கேள்வி

மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, “கடந்த ஒன்பது ஆண்டுகளாக சகோதரிகளைப் புறக்கணித்த நீங்கள்ம், ரக்‌ஷா பந்தனுக்காக இப்போது சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்திருக்கிறீர்கள். சிலிண்டர் விலையைக் குறைத்ததன் நோக்கத்தை அனைவரும் அறிவார்கள்” என்று தெரிவித்தார். முஸ்லிம் … Read more

4 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு 51 அடியாக சரிந்துள்ளது. பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது. மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் … Read more