இந்திய சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ … Read more

மாநில கல்விக் கொள்கை: இறுதி கட்டப் பணிகள் தீவிரம் – செப்டம்பரில் அறிக்கை தாக்கல்!

தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியது. அப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. மருத்துவப் படிப்பு படிக்க வேண்டுமானால் அதற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறி பாமர மக்களின் மருத்துவ கனவு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் அனைத்து உயர் படிப்புகளிலிருந்தும் ஏழை … Read more

அரசு பள்ளி விடுமுறை நாட்கள்… 23ல் இருந்து வெறும் 11ஆக குறைந்தது… பகீர் கிளப்பிய பிகார்!

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்று கால அட்டவணை வெளியாகும். அதில் 25க்கும் மேற்பட்ட பொது விடுமுறை நாட்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் பிகார் மாநில அரசு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கல்வியாண்டில் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பண்டிகை கால விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பள்ளி விடுமுறை நாட்கள் முன்னதாக 23ஆக இருந்த நிலையில் இனிமேல் 11 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். இதன்மூலம் பிகார் … Read more

சிங்கப்பூருக்கு மட்டும் அரிசி ஏற்றுமதிக்கு ஓகே சொன்ன இந்தியா… என்ன காரணம் தெரியுமா?

கடந்த ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத பச்சை அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. சமீப காலமாக அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி விதித்தது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மத்திய அரசின் … Read more

'விக்ரம்' பட வசூலை முந்திய 'ஜெயிலர்': இன்னும் அந்த சாதனை மட்டும் தான் பாக்கி.!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ கமலின் ‘விக்ரம்’ படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது. வசூல் வேட்டை’ஜெயிலர்’ படத்தின் வசூல் வேட்டை எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு செல்கிறது. முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் கலக்கிய இந்தப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். தலைவர் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு படத்தில் ரஜினி மாஸ் காட்டியிருந்தார். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் வசூலில் புது சாதனை படைத்துள்ளது.எதிர்பார்ப்பு நிறைவுகடந்த 10 ஆம் … Read more

"பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

ஆசிய கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரத்தாக வாய்ப்பு – ஏன்?

கடந்த முறை 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் போட்டியாக நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பாகிஸ்தானில் இப்போது ஆசிய கோப்பை தொடர் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் களமிறங்கியுள்ளன. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றடைந்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள … Read more

Jawan Audio Launch: ஹிந்தியில் கேட்ட கேள்வி; `என் மொழியில முதல்ல பேசிக்கிறேன்…' – யோகி பாபு

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஷாருக் கானின் மாஸ் என்ட்ரியுடன் தொடங்கியிருக்கிறது. கமெடி நடிகராகவும், கதாநாயகனாகவும் கலக்கிவரும் நடிகர் யோகி பாபு இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா, விளையாட்டாக யோகி பாபுவிடன் இந்தியில் கேள்வி கேட்க, அதற்கு யோகி பாபு, ‘முதல்ல … Read more

மழை நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்ட முதல்வர்

சென்னை இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்று அங்கு மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் திரு வி க நகர், பெரம்பூர், பாடி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார். முதல்வர் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் … Read more

100க்கு போன் போட்டுவிட்டு.. உயிர் போகும் வரை உதைத்த இளைஞர்கள்.. வேளாங்கண்ணி யாத்திரையில் பகீர்

மயிடுலாதுறை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களிடம் செல்போனை திருட முயன்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடலூரைச் சேர்ந்த 6 பேரை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர். உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் Source Link