'தனி ஒருவன் 2' – வாழ்த்திய கார்த்தி, அரவிந்த்சாமி

மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'தனி ஒருவன்'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஜெயம் ரவி, நயன்தாரா நாயகன், நாயகியாக நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். முதல் பாகத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் இறந்துவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை. அந்தக் கதாபாத்திரத்தை விடவும் பவர்புல்லான ஒரு வில்லன் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் இருக்கலாம் என … Read more

Vijay Sethupathi: குடும்பத்துடன் சேட்டன்ஸ் லுக்கில் மாறிய விஜய் சேதுபதி… ஓணம் செலப்ரேஷன் ஓவர்!

சென்னை: கோலிவுட்டில் ரொம்பவே பிஸியான நடிகர்கள் விஜய் சேதுபதியும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கேரளாவின் பாரம்பரியமான ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் விஜய் சேதுபதி கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது.

ஸ்மைல் ப்ளீஸ்..!! விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்

பெங்களூரு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. பள்ளம் போன்ற தடைகளை பக்குவமாக பார்த்து ஒய்யாரமாக நடை போடும் ரோவர் நிலவில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதை கண்டறிந்து சரித்திர … Read more

'இந்தியாவில் பேட்டிங் செய்வது கடினம்': கேப்டன் ரோகித் சர்மா

மும்பை, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்தவித ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இன்று முதல் ஆசிய கோப்பை தொடர் நடைபெற … Read more

ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க ஜப்பான் முடிவு..!

டோக்கியோ, ஜப்பான் தனது அண்டை நாடான வடகொரியா, சீனாவின் நடவடிக்கைகளால் அவ்வப்போது பதற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது உள்ள ராணுவத்தின் திறனை கொண்டு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள முடியாது என ஜப்பான் ராணுவ தலைமை தளபதி யோஷிகிடே யோஷிடா நிருபர்களிடம் கூறினார். மேலும் மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடாமல் இருக்க நமது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். அடுத்தபடியாக அமெரிக்காவின் அணு ஆயுத யுக்தி உள்பட நமது தற்காப்பு திறன்களை … Read more

Hero Karizma XMR vs rivals – ஹீரோ கரீஸ்மா XMR vs போட்டியாளர்கள் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

200cc-250cc வரையிலான சந்தையில் உள்ள ஃபேரிங் ஸ்டைல் மாடல்களை எதிர்கொள்ளும் ஹீரோ மோட்டோகார்ப் கரீஸ்மா XMR பைக்கின் போட்டியாளர்களான யமஹா R15, சுசூகி ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் SF, பஜாஜ் பல்சர் RS 200, மற்றும் கேடிஎம் RC 200 ஆகிய மாடல்களுடன் எக்ஸ்ட்ரீம் 200S 4v ஆகியவற்றின்  தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, என்ஜின் விபரம் அறிந்து கொள்ளலாம். ஃபேரிங் ஸ்டைலை பெற்றிருக்கின்ற சுசூகி ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் SF, எக்ஸ்ட்ரீம் 200S 4v … Read more

பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருத்துவர்களுக்காக தனிப்பட்ட ரீதியாக காணிகளின் உரிமையை வழங்குவதற்கான உறுதிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கும் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பாக இன்று (29) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் … Read more

‘பாஜக மாடல் டோல்கேட்’ குற்றச்சாட்டு: பரனூர் டோல்கேட் விவகாரத்தில் நடந்தது என்ன?!

பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக ரூ.28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி அறிக்கையின் மூலம் தகவல் வெளியானது. மேலும், அந்த அறிக்கையில், ஆகஸ்ட் மாதம் 2019-ம் ஆண்டில் இருந்து ஜூன் மாதம் 2020-ஆம் ஆண்டின் காலகட்டத்தில் மட்டும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியே 1.17 கோடி வாகனங்கள் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில் 62.37 லட்ச வாகனங்கள், அதாவது 53.27 சதவிகிதம் … Read more

5 மாநிலத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறப்பு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: “நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக அரசு … Read more

முதலீடுகளை ஈர்க்க சட்டத்தின் ஆட்சி முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: முதலீடுகளை ஈர்ப்பதற்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது மிகவும் முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: பாதுகாப்பான சூழ்நிலை, சட்டத்தின் ஆட்சி ஆகியவை வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்துகின்றன. இதற்கு உத்தர பிரதேச மாநிலத்தை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய உ.பி. மாநிலம் … Read more