மும்பை | இந்திய அரசியலமைப்பு, தேசிய சின்னம், பாரத மாதா படம் – ‘இண்டியா’ கூட்ட அரங்கில் காட்சி

மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இந்நிலையில், இந்த கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வெளியில் இந்திய அரசியலமைப்பின் நகல், தேசிய சின்னத்தின் மாதிரி மற்றும் பாரத மாதா படம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது மூன்றாவது கூட்டம் … Read more

தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை… சென்னைக்கும் இருக்காம்… தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்!

திருவண்ணாமலை, சேலம், ஈரோடு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் மழைதமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னல் என வெளுத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் மாலை நேரங்களில் தணிந்து வருகிறது.தமிழகம் முழுவதும்தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் விழுப்பும், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், … Read more

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா மிஷன்: இறுதிக்கட்ட பணிகள் நிறைவு… நாளை கவுண்டவுன் தொடக்கம்… இஸ்ரோ தலைவர் அறிவிப்பு!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்யவுள்ளது. இதற்காக வரும் செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதியான சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்வுகள் … Read more

மகன்களின் முகத்தை முதல் முறையாக காட்டிய நயன்தாரா: விக்னேஷ் சிவனிம் மன்னிப்பு கேட்கும் ரசிகாஸ்

இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பதால் அடிக்கடி ரசிகர்களிடம் திட்டும், சாபமும் வாங்கும் ஒரே இயக்குநர் விக்னேஷ் சிவனாக தான் இருக்கும். அதற்கு காரணம் அவர் மட்டுமே. Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்! லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவை காதலித்த காலத்தில் அவரை டிசைன், டிசைனாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து தங்கமே, செல்லமே, வைரமே என்பார். அதை பார்த்து ஆள் இல்லாமல் அல்லாடும் 90ஸ் கிட்ஸுகள் … Read more

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகம்

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி உலகில் முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகமாகிறது. Tecentriq என்ற மருந்து இதுவரை ஐ.வி. மூலம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இனி அதனை ஊசி மூலம் செலுத்தப்பட உள்ளது. இ்கிலாந்து சுகாதார அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதை அடுத்து இனி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கண்கான புற்றுநோயாளிகளுக்கு இந்த ஊசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது Tecentriq மருந்து ஐ.வி. மூலம் ஆண்டுக்கு 3600 பேருக்கு செலுத்தப்படுவதாகவும் இதற்கு 30 நிமிடம் முதல் ஒரு … Read more

வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் : ஜூன் காலாண்டில் வளர்ச்சி 7.80 சதவீதம்| Fastest growing Indian economy: Growth at 7.80 percent in June quarter

புதுடில்லி:இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக, கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.80 சதவீதத்தை எட்டியுள்ளது. விவசாயம் மற்றும் நிதி துறைகளின் சிறந்த செயல்திறன் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.அண்டை நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இதே காலகட்டத் தில் 6.30 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியா, 7.80 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதையடுத்து, உலக நாடுகள் … Read more

15 லட்சம் பணம், பாஸ்போர்ட் திருட்டு : லண்டனில் ஜோஜு ஜார்ஜ் தவிப்பு

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் 'ஜெகமே தந்திரம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் 'ஆண்டனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக படக் குழுவினருடன் லண்டன் சென்றார். அவருடன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட படக் குழுவினரும் சென்றிருந்தனர். புரமோசன் நிகழ்வு முடிந்தவுடன் ஜோஜு ஜார்ஜ் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது பையில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை … Read more

Pawan Kalyan – 470 கிலோ வெள்ளியில் பவன் கல்யாணின் முகம்.. மாஸ் காட்டும் தே கால் ஹிம் ஓஜி

ஹைதராபாத்: Pawan Kalyan (பவன் கல்யாண்) தே கால் ஹிம் ஓஜி படத்தின் அப்டேட் செப்டம்பர் இரண்டாம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் பவன் கல்யாணின் முகத்தை 470 கிலோ வெள்ளியில் உருவாக்கியிருக்கிறார் ரசிகர் ஒருவர். தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். அவருக்கென்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் ரசிகர் பட்டாளம்

`I.N.D.I.A' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? – தேர்வில் எழுகிறதா கருத்து வேற்றுமை?!

பாட்னா, பெங்களூருவைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும், நாளையும் (ஆக. 31, செப். 1) நடைபெறுகிறது. கூட்டணிக்கான ஒருங்கிணைப்புக் குழு, இலட்சினை, கூட்டுப் பிரசார வியூகம் போன்றவை இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ‘இந்தியா’ கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியதிலிருந்து பா.ஜ.க தரப்பில் முன்வைக்கப்படும் கேள்வி, ‘உங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பதுதான். அதற்கு, ‘உங்களிடம் இருப்பது மோடி என்கிற ஒரே ஒரு நபர்தான். ஆனால், எங்கள் … Read more

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்

மதுரை: “கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தது. 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் … Read more