அமெரிக்கா ஏர்போர்ட்டில் விஜய்.. எல்லாம் 'தளபதி 68' படத்துக்காக: தீயாய் பரவும் புகைப்படம்.!

‘லியோ’ படத்தின் ரிலீசுக்கே இன்னமும் ஒரு மாதம் உள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதால் ‘தளபதி 68’ பட வேலைகளும் துவங்கி விட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் ஏர்போட்டில் இருப்பதை போன்று வெளியாகியுள்ள லேட்டஸ்ட் போட்டோ சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. ‘லியோ’ படத்தின் ரிலீஸ் வரை ‘தளபதி 68’ குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிட கூடாது என்பதில் கவனமாக … Read more

சந்திரயான் 3 ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், அலுமினியம் உள்ளிட்ட வேதியல் மூலக்கூறுகளை கண்டுபிடித்த பிரக்யான்!

சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய வேதியல் கூறுகளை நிலவில் கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனையின் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து பல்வேறு வேதியல் மூலக்கூறுகளின் இருப்பை கண்டுபிடித்துள்ள முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது இந்தியா. சூரியன் மூலம் எனர்ஜி பெரும் ரோவர் சந்திராயன் – 3 விண்கலத்தில் சென்ற ரோவர் தந்து லேண்டர் உதவியுடன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சில நாட்களாக … Read more

இதயம் அப்டேட்: வாசுவை அடித்து தூக்கிய கார், திருமண மேடையில் ஆதிக்கு அட்டாக் – ஆரம்பமே விறுவிறுப்பு

Idhayam Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் இதயம். 

ஹெராயின் வழக்கில் ஆஜராகுமாறு என்.ஐ.ஏ நோட்டீஸ் அனுப்பியதா? – வரலட்சுமி விளக்கம்

நடிகை வரலட்சுமி சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு  என்.ஐ.ஏ நோட்டீஸ் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. கேரளா விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதான ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் என்பதால்  வரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை மறுத்து என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு நோட்டீஸ் ஏதும் வரவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், … Read more

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்…

மதுரை: மதுரை மீனாட்சிஅம்மனை தரிசித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் தெரிவித்தார். மறைந்த தமிழ்நாடு முதல்வர்  “ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய இடமாகவும் இருந்து வந்த கோடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு  பிறகு 2017, ஏப்ரல் 24ஆம் தேதியன்று  கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில், அங்கிருந்த காவல்காரர்  ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு காவலாளியான  கிருஷ்ணபகதூர் என்பவர் … Read more

எதற்கு நடிக்க வேண்டும்? அதையே தொழிலாக செய்யலாமே – ப்ரீத்தா ரெட்டி ஆவேசம்

சின்னத்திரையில் இனியா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் அனுபவித்ததால் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சினிமாவில் ஆடிசனிலும் தேர்வான பிறகு ஒப்பந்தம் கையெழுத்து போடும் போது சில நிபந்தனைகளை வைப்பார்கள். அதனால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்திருக்கிறேன். சில இயக்குநர்கள் அட்ஜெஸ்மெண்ட் கேட்பார்கள். நடிக்கும் வாய்ப்பிற்காக அதை செய்தே ஆக வேண்டும் என்றால், அதையே … Read more

நடிகர் விஜய் புதிய நியூஸ் சேனல் தொடங்குகிறாரா? இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: நடிகர் விஜய் புதியதாக நியூஸ் சேனல் தொடங்கி இருப்பதாக வெளியாகி உள்ள செய்திக்கு அவர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த

மாஞ்சோலை: `மாடு வளர்த்தால் மெமோ!' பால் பருகுவது அரிதான இருண்ட காலம்|1349/2 எனும் நான்|பகுதி 25

“அவசரம் – பால் வண்டி” என எழுதப்பட்ட வாகனங்களை சாலையில் அடிக்கடி காண்கிறோம். “பால்” அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று. அதன் காரணமாகவே, கொரோனா ஊரடங்கு காலத்திலும், விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்த பொருட்களில் பாலும் இடம் பெற்றிருந்தது. தாய்ப்பாலுக்கு அடுத்து, குழந்தைக்குக் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவது பசும்பால். ஆனால், 1990களுக்குப் பின்னர் பிறந்த குழந்தைகளின் தேவைக்குப் போதுமான பசும்பால் எஸ்டேட் பகுதியில் கிடைக்கவிடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அதனாலேயே “வீட்டு முன் காய்கறித் தோட்டம் அமைக்கும், ஆடு மாடு வளர்க்கும் அனுமதியைத் … Read more

கோவை மேயரின் குடும்பத்தின் மீதான புகாரை ஆராய்ந்து விசாரணை நடத்த வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவை: கோவை மேயரின் குடும்பத்தின் மீதான புகார் குறித்து உண்மையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், அங்கிருந்தவர்களோடு நடனம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழக முதல்வர் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்ததை வரவேற்கிறோம். ஆனால், தீபாவளிக்கும் … Read more