இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது – மீண்டும் வலியுறுத்திய ராகுல் காந்தி
புதுடெல்லி: இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இவ்விஷயத்தில் பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லடாக் பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. நான் லடாக் சென்றிருந்தபோது உள்ளூர் மக்களும் இதைத் தெரிவித்தார்கள். சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிட்டது என நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். ஆனால், பிரதமர் என்ன சொல்கிறார்? ஒரு இன்ச் நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என அவர் தெரிவிக்கிறார். … Read more