Kavin: பிக்பாஸ் கவினுக்கு 'டும் டும் டும்': மணப்பெண் யார் தெரியுமா.?

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது பிரபலமான நடிகராக வலம் வருகிறார் கவின். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘டாடா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது இந்தப்படம். இந்நிலையில் கவின் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் கவின். சீரியல்களில் நடித்து வந்த இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக … Read more

New GST Rules: ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம்! 5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு பாதிப்பு

New GST Rules in India: ஐந்து கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு இன்று முதல் ஜிஎஸ்டி விதிகள் மாற்றப்பட்டுள்ளன. வரி ஏய்ப்புகளைக் குறைக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் விளக்கத்தை அடுத்து குழப்பம்… தெளிவுபடுத்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தைவானைச் சேர்ந்த ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (ஃபாக்ஸ்கான்) நிறுவனம் தமிழகத்தில் புதிதாக 1600 கோடி ரூபாய் முதலீட்டில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஃபாக்ஸ்கான் க்ரூப்பின் தலைவர் யங் லியுவையும் அவரது அணியினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 1,600 … Read more

குத்தாட்டம் போட்ட குத்துச்சண்டை வீராங்கனை

தேசிய குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் குத்துசண்டை வீராங்கனையாகவே நடித்தார். ஒரு படத்துடன் விலகி மீண்டும் குத்துச் சண்டைக்கு செல்ல தீர்மானித்த அவரை இறுதிசுற்று படத்தின் வெற்றி நிரந்தர நடிகை ஆக்கியது. தொடர்ந்து விஜய் சேதுபதி ஜோடியாக 'ஆண்டவன் கட்டளை', ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'சிவலிங்கா', அசோக் செல்வன் ஜோடியாக'ஓ மை கடவுளே', சமீபத்தில் 'கொலை' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் … Read more

Jailer: நாளை வெளியாகும் ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர்.. மிரட்டல் போஸ்டருடன் அறிவிப்பு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் வெளியானது.

பேரணியில் வெடித்த பெரும் மோதல்; கலவர பூமியான ஹரியானா! – பிரச்னையின் பின்னணி என்ன?

இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில், இப்போது ஹரியானா மாநிலத்திலும் புதிதாக கலவரம் வெடித்திருப்பதால் வட இந்தியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஹரியானாவிலுள்ள குருகிராமை அடுத்திருக்கும் நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்கிற பெயரில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்திருக்கிறார். அந்த அமைப்பினர் பேரணியாக கேத்லா மோட் … Read more

பழநி கோயில் நுழைவு | உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திடுக: அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: பழநி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிடும். எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வழிபாட்டு தலங்களாக உள்ள கோயில்களை தங்களது மதவெறி அரசியலுக்கு பாஜக பயன்படுத்துவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. பழநி கோயிலில் தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி போராட்டங்களை நடத்தி வருகிறது. … Read more

மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றாக சீர்குலைந்துவிட்டது: உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நிர்வாண அணிவகுப்பு செய்யப்பட்ட இரு பெண்களின் மனுக்கள் உள்ளிட்ட மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின்போது, மணிப்பூர் காவல் துறை மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. “குற்றங்கள் நிகழ்ந்து … Read more

டிடிவி தினகரனை 420 என்று கூறிய ஓபிஎஸ்.. இன்று காலில் விழுகிறார்.. ஜெயக்குமார் கடும் விமர்சனம்

சென்னை: “டிடிவி தினகரனை 420 என்றும், மாயமான் எனவும் கூறிய அதே ஓ.பன்னீர்செல்வம் தான் இன்றைக்கு அவர் காலில் விழுந்தும் அவருடன் இணைந்தும் போராட்டம் நடத்துகிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனியில் நடந்த போராட்டத்தில் அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் … Read more