மேற்கு வங்காள சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தீர்மானம் – பா.ஜனதா வெளிநடப்பு
கொல்கத்தா, மணிப்பூரில் தொடரும் கலவரம் அனைத்து தரப்பினரையும் கவலை அடைய வைத்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபை விவகாரத்துறை மந்திரி சொவந்தேப் சட்டோபாத்யாய் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கலவரத்தை அடக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தார். அவர் கூறும்போது, ‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல … Read more