தென் ஆப்பிரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 64 பேர் பலி; பலர் காயம்

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 43 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நள்ளிரவு 1.30 மணிக்கு தீயணைப்புத்துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். … Read more

மரக்காணத்தில் மீண்டும் கள்ளச்சாராயம்; 450 லிட்டர் பறிமுதல்; வியாபாரி வீட்டுக்கு சீல்!- நடந்தது என்ன?

மூன்று மாதங்களுக்கு முன்பாக, விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 8 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 21 உயிர்களை பலிகொண்ட கள்ளச்சாரய சம்பவம், தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அது, மெத்தனால் என்ற கெமிக்கல் கலக்கப்பட்ட விஷச்சாராயம் என்பது ஆய்வில் தெரியவந்திருந்தது. அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், இரண்டு மாவட்டங்களிலும் எஸ்.பி-கள் முதல் ஏட்டுகள் வரை பணி மாறுதல்கள், பணி … Read more

காவிரி மேலாண்மை வாரிய முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரையில், விநாடிக்கு 7,200 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல், 5,000 கனஅடி தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை வாரியம் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தங்களால் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில், ஒரு … Read more

“அந்தப் பணம் யாருடையது?" – அதானி குழும விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி

மும்பை: அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ‘இண்டியா; கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ள ராகுல் காந்தி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி (OCCRP) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற இரண்டு பொருளாதார பத்திரிகைகள் செய்தி … Read more

விஜயலட்சுமி அளித்த புகார்.. விசாரணையை தொடங்கிய போலீஸ் – சிக்கலில் சீமான்?

சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக போலீசார் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். தமிழில் வெளியான தம்பி, வாழ்த்துகள் உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். அதில், வாழ்த்துகள் படத்தில் நடித்த விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி மீண்டும் பரபரப்பு புகார் … Read more

அதானி குழும முதலீடு பணம் யாருடையது.. ? மோடி தயங்குவது ஏன்? – ராகுல் சராமாரி கேள்வி!

அதானி குழுமம் முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக என இந்தியா முழுவதும் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் … Read more

அமிதாப் பச்சனை அண்ணனாக்கினார் மம்தா ??

அமிதாப் பச்சன் ஒரு நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, பாடகர், தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் அவரது குடும்பத்தோடு மும்பை ஜூஹூ நகரில் அவரது ஜல்ஸா பங்களாவில் குடியிருக்கிறார். நேற்று ரக்ஷபந்தனை அவர் தன் குடும்பத்தோடு கொண்டாடி வந்தார். மம்தா பனர்ஜீ மற்றும் அமிதாப் பச்சன் இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜீ அமிதாப் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் மம்தாவை அனைவரும் கவனித்தனர். ஐஸ்வர்யா ராய் குடுத்த தேநீரை இரண்டாம் முறை வேண்டும் … Read more

Google AI Search ஆப்ஷன் இந்தியாவிலும் அறிமுகம்! இனி தேடுறதுக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்லும் கூகுள்!

டிஜிட்டல் உலகம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு(AI) மிக முக்கிய இடத்தை வகித்து வருகிறது. சாதனங்கள் தொடங்கி தொழிற்நிறுவனங்கள் வரை அனைத்திலும் AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் முன்னணி தேடுதளமான கூகுள் இந்தியாவில் முதன்முறையாக AI உதவியுடன் Search செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Google AI தேடல் வசதி கூகுளை பயன்படுத்தி சேவைகளை தேடும் பயனர்களின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தவும், சரியான மற்றும் துல்லியமான சேவை அவர்களுக்கு கிடைக்கவும் கடந்த … Read more

காணாமல் போன பச்சைக் கிளி… கண்டு பிடித்து கொடுத்தால் ₹5,000 வெகுமதி அறிவித்த பெண் இஸ்பெக்டர்!

மீரட்டில் உள்ள பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது கிளி காணாமல் போனதால் மிகவும் வருத்தமடைந்தார். கிளியை கண்டுபிடித்து அழைத்து வருபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு அறிவித்தார்.

ஒரே நாளில் 6 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்..! எந்த படத்தை முதலில் பார்ப்பது?

Theatrical Releasese On September 1st: செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை, ஒரே நாளில் 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் முதிலில் எந்த படத்தை பார்ப்பது?