அநாகரிக கேள்வி : ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் இவர், தான் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதோடு ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடலும் நடத்துகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் அரசியல் தவிர அனைத்து கேள்விகளுக்கும் தான் பதிலளிக்க தயார் என்று ஒரு உரையாடல் நடத்தினார் ஷாலு ஷம்மு. அப்போது ஒரு ரசிகர், உங்களது மார்பகத்தின் சைஸ் என்ன என்ற ஒரு கேள்வியை கொச்சையான வார்த்தைகளால் கேட்க, கடும் அதிர்ச்சி அடைந்தார் ஷாலு ஷம்மு. என்றாலும் அடுத்த கனமே, உன்னுடையதை விட பெரியதுதான் என்று அந்த ரசிகருக்கு ஒரு செருப்படி பதில் கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.