வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி–: ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.59 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டில் 11 சதவீதம் வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, அதிகபட்சமாக, கடந்த ஏப்ரலில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது. அதற்கு பிறகு, ஜூலை மாதத்தில் வசூல் ரூ.1.16 கோடியாக இருந்தது.
இந்நிலையில் இன்று வெளியான தகவலில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59 லட்சம் கோடியாக உயந்துள்ளது. இதே போன்று 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடியாக இருந்தது. இந்தாண்டு 2023 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.59 கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளதாக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பொருளாதார செயல்பாடுகள் , ஜி.எஸ்.டி., கவுன்சிலின் நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement