சேஸிங் அணி அதிக வெற்றி
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பல்லக்கலே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்க இருக்கிறது. இந்த மைதானத்தில் 33 ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 14 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சேசிங் செய்த அணிகள் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி மட்டும் முடிவு இல்லை.
டிஆர்எஸ் விதிமுறை தீர்வு
இலங்கை-வங்காளதேசம் ஆசியக் கோப்பை 2023 போட்டிக்கு முன் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் என்னவென்றால் 248 ரன்கள். இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 314 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறது. இதுதான் இந்த மைதானத்தில் அதிகபட்ச சேஸிங்கில் ஒன்றாக இருக்கிறது. மழை இங்கு பெய்யும் என வானிலை தகவல்கள் கூறுவதால் போட்டியின் முடிவு பெரும்பாலும் டிஆர்எஸ் விதியை பொறுத்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் அதற்கு ஏற்ப டாஸ் வெற்றி பெறும் அணி சேஸிங் செய்ய ஆர்வம் காட்டும்.
பேட்டிங் vs பந்துவீச்சு
இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சராசரியாக 31.15 ரன்கள் கொடுப்பார்கள், அதாவது ஓவருக்கு 5.65 ரன்ரேட் இருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் ஸ்பின்னர்கள் 4.95 ரன்ரேட்டில், 34.17 சராசரியாக வீசியிருக்கிறார்கள். SL vs BAN ஆசிய கோப்பை 2023 போட்டிக்கு முன்னதாக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 271 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் 186 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்கும் இந்த மைதானத்தில் நல்ல வாய்ப்பு இருக்கிறது.
இந்தியா ஆதிக்கம்
இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த மைதானத்தில் இந்தியா தனது மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் இந்த மைதானத்தில் 2 வெற்றி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது. இப்போதைய ஒருநாள் போட்டி தரவரிசையில் பாகிஸ்தான் அணி தான் நம்பர் ஒன். இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.