மும்பை,
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்றது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,
இது வெறும் 28 கட்சிகளின் கூட்டணி அல்ல, 140 கோடி மக்களின் கூட்டணி. சுதந்திர இந்திய வரலாற்றிலேயே மோடி அரசுதான் ஊழல் மற்றும் திமிரான அரசு. இவர்கள் தங்களை கடவுளுக்கு மேல் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும் சக்திகள் இந்தியா கூட்டணியை உடைக்க முயல்வார்கள். இன்று இங்கு யாரும் பதவி வாங்க வரவில்லை ஆனால் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வந்துள்ளோம். என தெரிவித்தார்.