இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியின் நேற்று (31) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 43 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக Najmul Hossain Shanto 89 ஓட்டங்களையும், Towhid Hridoy 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அபார பந்துவீச்சில் ஈடுபட்ட மதிஷ பத்திரன 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லாகே, தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. துடுப்பாட்டத்தில் சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் சரித் அசங்க 62 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாகShakib Al Hasan 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மதீஷ பத்திரன ஆட்ட நாயகன் விருதை வென்றார். இலங்கை பங்கேற்கும் அடுத்த ஆட்டம் எதிர்வரும் 05ம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடைபெற உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.