
என் கனவுகள் வீழாது – ஸ்டார் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது
கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த டாடா படம் வெற்றி பெற்றது. அடுத்து ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அவர் நடிக்கும் ஸ்டார் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இளன் இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஸ்டார் படத்தின் பிரோமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் கவின் கவிதை ஒன்றை சொல்லி முடித்த பிறகு யுவன் சங்கர் ராஜாவின் குரலில் ஒரு பாடல் ஒலிக்கிறது.