மாண்டியா, தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, காவிரி பாயும் மாவட்டங்களில் விவசாய அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
புது டில்லியில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு நீர் திறக்கும்படி கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி, கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படப்படுகிறது.
இதை கண்டித்து, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணாவில், விவசாயிகள் நள்ளிரவில் தீப்பந்த பேரணி நடத்தினர்.
சர்வோதயா கர்நாடகா கட்சியின் மேலுகோட்டே எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணய்யா தலைமையில், தண்ணீர் திறப்பதை நிறுத்தும் வரை, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, கர்நாடகா தரப்பில் எத்தகைய வாதங்களை முன் வைப்பது என்பது குறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், டில்லி கர்நாடக பவனில் நேற்று, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement