தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளது. 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் ஆகஸ்ட் மாதம் மோசமான மழை பொழிவை பெற்றுள்ளதோடு கடுமையான வெப்ப நிலையை சந்தித்ததாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது ஒரு நல்ல செய்தியை கூறியிருக்கிறது இந்திய வானிலை மையம். அதாவது தெலுங்கானா மாநிலத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சம்பளம் உயர்வு அறிவிப்பு: கிராம அமைப்பு உதவியாளர்கள் ஹேப்பி – கேசிஆர் கொடுத்த சர்ப்ரைஸ்!
மேலும் செப்டம்பர் 2ஆம் தேதி அதாவது நாளை முதல் வரும் 5ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா மாநிலத்திற்கு ஒரு முக்கிய நாளாக இருக்கும் என்றும் அன்றைய நாள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திங்கள் கிழமை ஹைதராபாத்தில் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடந்த மாதம் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மற்றும் முளுகு ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் 60 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இருப்பினும் அம்மாநலித்தின் பல மாவட்டங்கள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளன.
ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… 122 ஆண்டுகளுக்குப் பிறகு மழை செய்த சம்பவம்… வானிலை மையம் பகீர்!
நாடு முழுவதும் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளது. இந்த ஒரு மாதம் மட்டுமே தென்மேற்கு பருவ மழை பெய்யும் என்பதால், தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மழை பெய்யுமா என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் பருவமழை மீண்டும் சூடுபிடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.