தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே சட்டசபை தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் ஆளும் சந்திரசேர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி மற்றும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கியுள்ளன.
தெலுங்கானா மாநில முதல்வரான கே சந்திரசேகர ராவ், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர செயல்பட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… 122 ஆண்டுகளுக்குப் பிறகு மழை செய்த சம்பவம்… வானிலை மையம் பகீர்!
அந்த வகையில் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சிறுபான்மை குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணி தொடங்கியுள்ளது. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையும் விவசாயிகளுக்கு வேகமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மெட்ரோ ரயில் விரிவாக்கம், சாலை விரிவாக்கம், முசி ஆற்றில் பாலம் கட்டும் பணி மற்றும் குப்பை கிடங்குகளை நிறுவுதல் தொடர்பான பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் சந்திரசேகர ராவ், மத்திய அரசு ஊழியர்களை விட தெலுங்கானா அரசு ஊழியர்கள் அக்டோபர் மாதம் முதல் அதிக சம்பளம் வாங்குவார்கள் என அறிவித்தார்.
ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் தென்காசி விஞ்ஞானி!
இந்நிலையில் தெலுங்கானா மாநில கிராம அமைப்பு உதவியாளர்களுக்கான சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் சந்திரசேகர ராவ். முதல்வர் சந்திரசேகர் ராவ், கிராம அமைப்பு உதவியாளர்களுக்கு, தற்போதுள்ள ₹5,900ல் இருந்து ₹8,000 ஆக உயர்த்தி, ரக்ஷா பந்தன் பரிசு என அறிவித்துள்ளார்.
இந்த உயர்வு செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதால், IKP சுயஉதவி குழுக்களில் பணிபுரியும் 17,608 VOAக்கள் பயனடைவார்கள். இதனால் மாநில கருவூலத்தில் ஆண்டுக்கு ₹106 கோடி கூடுதல் செலவாகும். விஓஏக்களின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
சிக்குவாரா சீமான்? விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு!
இதற்கான அரசாணை வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. முதல்வர் சந்திர சேகர ராவின் இந்த அறிவிப்பு கிராம அமைப்பு உதவியாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ஆனால் வரவுள்ள தேர்தலை முன்னிட்டே சந்திரசேகர ராவ் கிராம அமைப்பு உதவியாளர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.