‘ஜெயிலர்’ வெற்றிக்கு ரஜினிக்கு பரிசளித்ததை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமாரை சந்தித்து காசோலை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
ரஜினிக்கு கிடைத்த பரிசு’ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குதுலம் ஆகியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிக்கு காசோலையும், காரும் பரிசாக அளித்துள்ளது தான் சோஷியல் மீடியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது. BMW i7 மற்றும் BMW X7 காரை காண்பித்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தேர்ந்தெடுக்க சொல்ல, ரஜினியும் BMW X7 காரை சாய்ஸ் செய்துள்ளார். காசோலையை தொடர்ந்து இந்த காரையும் ரஜினிக்கு பரிசாக வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.
சன் பிக்சர்ஸ்’ஜெயிலர்’ படத்தின் மூலம் அதிக லாபத்தை பார்த்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த சந்தோஷத்தில் ரஜினிக்கு பரிசு வழங்கியுள்ளது. இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வர, அப்போ இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு எந்த பரிசும் இல்லையா? அவருக்கு கட்டாயமாக பரிசு கொடுத்தாகணும்ல என கூறி வந்தனர் ரசிகர்கள். அது மட்டும் இல்லாமல் இரண்டு காரில், நெல்சனுக்கும் ஒரு கார் போல என்றெல்லாம் சிலர் கூற ஆரம்பித்து விட்டனர்.
நெல்சன் திலீப்குமாருக்கு பரிசுரசிகர்கள் இப்படி எல்லாம் பேசியது சன் பிக்சர்ஸ் காதுக்கு கேட்ட விட்டது போல. இந்நிலையில் தான் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு வழங்கியதை போல் காசோலை ஒன்றை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தரமான கம்பேக்இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படமான ‘பீஸ்ட்’ ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கியது. விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம் விமர்சனரீதியாக கடும் சரிவை சந்தித்தது. இதனால் ‘ஜெயிலர்’ பட வாய்ப்பு நெல்சன் திலீப்குமார் கை நழுவி போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அதையெல்லாம் கடந்து தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் நெல்சன் திலீப்குமார்.
ஜெயிலர் வசூல் வேட்டைதமிழ்நாடு மட்டுமல்லாமல் ‘ஜெயிலர்’ படத்திற்கு உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. ரிலீசான நாளில் இருந்து வசூலில் பல சாதனைகளை படைத்து வரும் ‘ஜெயிலர்’ தமிழ்நாட்டில் கமலின் ‘விக்ரம்’ படத்தின் வசூலையும் முந்தியுள்ளது. மேலும் தற்போது பாக்ஸ் ஆபீஸில் ‘ஜெயிலர்’ படம் ரூ. 600 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.