‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து செக் ஒன்றை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
ஜெயிலர் ராஜ்ஜியம்ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெற்றியடையும் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தளவிற்கு பிரம்மாண்ட வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்ப்பவில்லை. அப்படி ஒரு இமாலய வெற்றியை பெற்றுள்ளது ‘ஜெயிலர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ‘ஜெயிலர்’ ராஜ்ஜியமாக வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் ரஜினி உட்பட படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
மாஸ் காட்டிய ரஜினிசமீப காலமாக வெளியான ரஜினி படங்கள் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகள் நிறைந்த படமாக ‘ஜெயிலர்’ கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியானது. ரஜினியை எப்படி காட்டினால் மக்கள் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்து ஒவ்வொரு சீனிலும், அவரை மரண மாஸாக காட்டி ரஜினி ரசிகர்களிடையே பாராட்டுக்களை அள்ளிவிட்டார் நெல்சன் திலீப்குமார்.
வசூல் சாதனை’பீஸ்ட்’ பட தோல்வியால் பல ட்ரோல்களில் சிக்கிய நெல்சனுக்கு ‘ஜெயிலர்’ படம் தரமான கம்பேக்காக அமைந்துள்ளது. வசூலிலும் பல சாதனைகளை படைக்கும் இந்தப்படம், வெளியான ஒரே வாரத்தில் ரூ. 375 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் ரிலீசான ஒரே வாரத்தில் அதிக கலெக்சன் செய்த படம் என்ற பெருமையை படைத்தது. மேலும் தற்போது ரூ. 600 கோடிகளை கடந்து ‘ஜெயிலர்’ பட வசூல் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.
பரிசளித்த கலாநிதி மாறன்இந்நிலையில் வரலாற்று சாதனை படைத்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சார்ந்த கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து செக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மேலும் அந்த செக்கில் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.ரெக்கார்ட் மேக்கர் ரஜினி’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைத்து ரஜினியை ரெக்கார்ட் மேக்கர் என கூறினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். அவரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ பட வெற்றியால் ரெக்கார்ட் மேக்கர் என்பதை நிரூபித்துள்ளார் நடிகர் ரஜினி. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.