புதுடெல்லி: உலகின் புதிய ஈட்டி எறிதல் சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்ட மூன்றே நாட்களில், நீரஜ் சோப்ரா மற்றொரு சாதனையை அடைந்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது பதக்கப் பட்டியலில் மற்றுமொரு வெள்ளியை சேர்த்துள்ளார். ஜூரிச் டயமண்ட் லீக் ஜெர்மனியில் நீரஜ் சோப்ரா பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சமீபத்தில் ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியனாக பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றார். ஜெர்மனியில் நடந்த சூரிச் டயமண்ட் லீக்கில, அவர் எறிந்த ஈட்டி 85.71 மீட்டர் தூரம் சென்றது. இது அவருக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.
Another Neeraj Chopra
The Men’s Javelin Throw World Champion sealed qualification for the #DiamondLeague final in Eugene
Keep watching #WandaDiamondLeague on #JioCinema & #Sports18 pic.twitter.com/K5S8hhTHdb
— JioCinema (@JioCinema) August 31, 2023
டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா. டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது. இதில், ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதைதொடர்ந்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்றார்.
டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது. ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடம் சோர்வு தென்பட்டது. நீரஜ் சோப்ராவின் முதல் முயற்சி (Zurich Diamond League) மிகவும் மோசமாக இருந்தது, மேலும் அவர் ஈட்டியை அதிகபட்சம் 80.79 மீட்டர் வரை மட்டுமே வீச முடிந்தது.
இந்த போட்டியில் கலந்துக் கொண்ட நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். அடுத்த 2 முறையும் அவருக்கு வெற்றியை தேடித்தராத நிலையில், 4வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார்.
நீரஜ் சோப்ராவின் 5வது முயற்சியிலும் தவறு ஏற்பட்டதால் நீரஜ் சோப்ரா பின்னடைவை அடைந்தார். பின்னர், இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார். போட்டி முடியும் வரை நீரஜ் சோப்ரா தனது 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த செக் குடியரசின் ஜக்குப் வால்டெக் 85.86 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியின் வெண்கலப் பதக்கத்தை ஜெர்மனியின் ஜூலியன் வெபர் வென்றார்.
தங்கப் பதக்கம் வென்ற யாகூப் வால்டெக்
இப்போட்டியில் தங்கம் வென்ற செக் குடியரசின் யாகூப் வால்டெக் ஏற்கனவே 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த லீக் போட்டிகளில், நீரஜ் சோப்ராவைத் தவிர, நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், 7.99 மீட்டர் வரை குதித்து, 5வது இடத்தை பிடித்துள்ளார். இதனால், செப்டம்பர் 16-17 தேதிகளில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டயமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ராவுடன் முரளி சங்கரும் தகுதி பெற்றுள்ளார்.