திடீரென கூடும் நாடாளுமன்றம்: பாஜக அரசு போடும் திட்டங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமரை பேச வைப்பதற்காக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது. அந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் கால கூட்டத் தொடர் தான் நடைபெறும். ஆனால் தற்போது சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவாகாரத் துறை அமைச்சர் பிரல்காத் ஜோஷி கூறியுள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஐந்து அமர்வுகள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக திடீரென சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட உள்ளதால் இதில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். பொது சிவில் சட்டம் தொட்ர்பான விவாதம் கூட நடைபெறலாம் என்கிறார்கள்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில மக்களை ஈர்க்கும் வகையில் சில மசோதாக்கள் நிறைவேற்றப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

மதுரை ரயில் தீப்பிடித்ததுக்கு இதுதான் காரணம் – எம்பி சு.வெங்கடேசன்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டாலும் மழைகால கூட்டத் தொடர் முழுவதும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெற்றது.

புதிய கட்டிடம் ஏன் மூடிவைக்கப்பட்டிருக்கிறது என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விசாரித்த போது சிலர் வாஸ்து பார்க்காமல் கட்டிவிட்டதாகவும், வாஸ்துக்காக சில மாற்றங்களை செய்வதாகவும் கூறியுள்ளனர். வேறு சிலர் மழை பெய்யும் கட்டிடத்தின் சில பகுதிகளில் தண்ணீர் வடிகின்றன என்று கூறியுள்ளனர். இதில் எது உண்மை என்று பாஜகவைச் சேர்ந்தவர்களிடத்திலேயே விசாரித்த போது, இரண்டும் உண்மை தான் என்று ரகசிய குரலில் கூறியுள்ளனர்.

இந்த சூழலில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.